• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு வீர மரணமடைந்த மருது சகோதரர்களின் 220வது நினைவு நாள்!

ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு வீர மரணமடைந்த மருது சகோதரர்களின் 220வது நினைவு நாள்!

மருது சகோதரர்கள்

மருது சகோதரர்கள்

மருது சகோதரர்களான பெரிய மருது, சின்ன மருது ஆகியோரின் 220வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ட்விட்டரில்  #1801திருப்பத்தூர்படுகொலை போன்ற ஹேஷ்டேக்கள் டிரெண்ட் ஆகி வருகின்றன.

  • Share this:
    சிவகங்கை சீமையை ஆண்டவர்களின் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்தவர்களுமான மருது சகோதரர்களின் ( பெரிய மருது, சின்ன மருது) 220வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மருது பாண்டியர்களுக்கு  பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    தமிழகத்தின் சிவகங்கை சீமையை ஆட்சி செய்து வந்தவர்கள் மருது சகோதரர்களான பெரிய மருது மற்றும் சிறிய மருது ஆவர்.  மருது பாண்டியர் என்று அழைக்கப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலை போரில் முக்கிய பங்காற்றியவர்கள்.  புகழ்பெற்ற காளையர் கோவில் கோபுரத்தை அமைத்தவர்கள்.

    மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி ஊமத்துரை, சிவத்தையா தம்பி, மீனங்குடி முத்துக்கருப்பத்தேவர், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை, விருப்பாச்சி கோபாலர், தேளி யாதுலர், பழசி கேரள வர்மா, மறைந்த திப்புவின் தளபதி தூந்தாகி வாக் ஆகியோருடன் ஆங்கிலேயருக்கு எதிராக தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கினர்.

    கடந்த 1801ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி மருது சகோதரர்களில் ஒருவரான சின்ன மருது  திருச்சியில்  ஜம்புத் தீவு பிரகடனம் என்ற அறிக்கையை வெளியிட்டார். அதில் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்து இனத்தினரும் ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்று சின்ன மருது அறைக்கூவல் விடுத்து இருந்தார்.

    மேலும் படிக்க: மெகா தடுப்பூசி முகாம்: 22.35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - சுகாதாரத்துறை தகவல்


    தங்களுக்கு சிம்ம சொப்பனமான திகழ்ந்த மருது சகோதரர்களை திருப்பத்தூர் கோட்டையில் 24-10-1801  அன்று ஆங்கிலேயர்கள் தூக்கில் இட்டனர். இந்தியாவின் ஒப்பற்ற வீரர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக கருதப்படும் பெரிய மருது, சின்ன மருது ஆகியோரின் 220ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மருது சகோதரர்களின் சிலைகள் மற்றும் திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: கோவில் திருவிழா, அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தமிழகத்தில் தடை தொடர்கிறது!


    இதேபோல், சமூக வலைதளங்களில் #1801திருப்பத்தூர்படுகொலை , #1801ThirupatturMassacre  போன்ற ஹேஷ்டேக்களை பயன்படுத்தி மருது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: