தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றான சிவகங்கை மக்களவைத் தொகுதி 1967-ம் ஆண்டு அறிமுகமானது.
1967 முதல் 1977 வரை தி.மு.க-வின் தொகுதியாக இருந்த சிவகங்கை அதன் பின்னர், காங்கிரஸ் கட்சியின் பலம் வாய்ந்த கோட்டையாக மாறியது. காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய நிதியமைச்சராக விளங்கிய ப.சிதம்பரம் 7 முறை சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மற்ற தொகுதிகளை கைப்பற்றியது போல அ.தி.மு.க சிவகங்கை தொகுதியையும் தனது வசம் ஆக்கியது. அ.தி.மு.க வேட்பாளர் செந்தில்நாதன் 4,75,993 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் சுப. துரைராஜ் 2.46,608 வாக்குகளையும் பா.ஜ.க வேட்பாளர் எச். ராஜா 1,33,763 வாக்குகளையும் பெற்று தோல்வி அடைந்தனர். ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் முதன் முறையாக போட்டியிட்ட இந்தத் தேர்தலில் அவரால் வெறும் 1,04,678 வாக்குகள் மட்டுமே பெற்று தந்தை பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தோல்வியைத் தழுவினார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் 72.83% வாக்குகள் பதிவாகின.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elections 2019, Lok Sabha Election 2019, Lok Sabha Key Constituency