சிவகங்கை: மனைவி இறந்த சோகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவர்

முத்துக்கிருஷ்ணனின் சடலத்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது..

சிவகங்கை மாவட்டத்தில் மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரின் மகன் சிவகுமார் (45). இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். முத்துக்கிருஷ்ணனின் மனைவி செல்வி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னாள் உடல்நலம் சரியில்லாமல் இறந்துள்ளார். மனைவி இறந்த துக்கம் தாளாமல் குடும்ப உறவினர்களிடம் அடிக்கடி அழுதுள்ளார். திருமண வயதில் தனக்கு மகள் இருக்கும்போது தன்னுடைய மனைவி இறந்து விட்டதாக எப்போதும் வருந்தி வந்துள்ளார்.

  இந்நிலையில், எதிர்பாராத விதமாக சிவகுமார் காந்தி ரோட்டில் உள்ள டிவி பழுதுபார்க்கும் கடையில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவகொட்டை நகர காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு  ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் இறந்தவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

  மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: