தீவிர நடவடிக்கையால் மீளும் வைகை ஆறு - சிவகங்கை ஆட்சியருக்கு விவசாயிகள் நன்றி

சுத்தம் செய்யும் பணி

சிவகங்கையில் வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தேனி வருசநாடு மலை பகுதியில் துவங்கி 5 மாவட்டங்களில் பாய்ந்து வரும் வைகை ஆறு சிவகங்கை மாவட்டம் வழியாக சென்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. தற்போது சிவகங்கை மாவட்ட பகுதியில் 45 கி.மீ துாரம் ஓடும் ஆற்று பகுதியில் எங்கு பார்த்தாலும் கருவேல மரங்களும், நாணல் செடிகளும் வளர்ந்து புதர் மண்டி போய் கிடந்ததை அடுத்து, மானாமதுரை விவசாயிகளும் வைகை ஆற்றை துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தனது பொது நிதி மூலம் வாங்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட மண் அள்ளும் இயந்திரங்களை கொண்டு முதலில் மானா மதுரை அருகே பனிக்கனேந்தல் தடுப்பனையிலிருந்து ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை  இரு மாதங்களுக்கு முன்பு துவக்கி வைத்தார். இதில் சமுக ஆர்வலர் பாலசுப்பிரமணி ஆகியோர் இதில் பங்கேற்று அவர்களும் வைகை ஆற்றை  சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி கொண்டு பணிகளை செய்தனர்.
படிக்க: \தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு

படிக்க: ஈரானை அடுத்து இலங்கையும்...! ரத்தாகும் இந்தியா உடனான திட்டங்கள்
மேலும்  தற்போது ஆதனுார் அருகே இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் ஆக்கிரமிப்பில் இருந்த நீர்நிலைகளை மீட்டதை போன்று வைகை ஆற்றையும் சுத்தப்படுத்தி,ம ணல் கொள்ளையையும் தடுத்த மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனை பாராட்டி அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

 
Published by:Sankar
First published: