• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இளையான்குடியில் தூய்மைப் பணியாளர்கள் & முதியவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய விவசாயிகள்

இளையான்குடியில் தூய்மைப் பணியாளர்கள் & முதியவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய விவசாயிகள்

News 18

News 18

இளையான்குடியில் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் முதியவர்களுக்கு விவசாயிகள் நிவாரண பொருட்கள் மற்றும் உணவு வழங்கியுள்ளனர்

  • News18
  • Last Updated :
  • Share this:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கச்சாதநல்லூரில் 5 கிராமங்களைச் சேர்ந்த தூய்மைப்பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் ஏழை எளியவர்கள் 150 பேருக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மதிய உணவு வழங்கி விவசாயிகள் உதவியுள்ளனர்.

இளையான்குடி பகுதி விவசாயிகள் ஒன்றினைந்து தாயமங்கலம், கச்சாத்தநல்லூர், பிராமணக்குறிச்சி, கலங்காதான்கோட்டை, A. நெடுங்குளம் ஆகிய கிராமங்களில், கொரானா வைரஸ் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு சுமார் 150 பேருக்கு, இறைவனை வழிபட்டு இனிப்புகள் வழங்கி, அனைவருக்கும் தலா 5 கிலோ அரிசி, தங்களது தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் மற்றும் மதிய உணவு வழங்கினர்.

உலகிற்க்கே உணவு வழங்கி வரும் விவசாயிகள், தூய்மை பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் அரிசி, காய்கறிகள் மற்றும் உணவு வழங்கிய இந்த நிகழ்வு சமூக ஆர்வலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் முதியவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையாக நின்று நிவாரண பொருட்கள் மற்றும் மதிய உணவை வாங்கிச் சென்றனர்.








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: