• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 10 பேருக்கு சமைக்க ஒற்றைப் பாத்திரம் - மூன்று தலைமுறையாக ரயிலடுக்கு பாத்திரத்தை பாதுகாக்கும் குடும்பம்

10 பேருக்கு சமைக்க ஒற்றைப் பாத்திரம் - மூன்று தலைமுறையாக ரயிலடுக்கு பாத்திரத்தை பாதுகாக்கும் குடும்பம்

மதுரவல்லி குடும்பம்

மதுரவல்லி குடும்பம்

”இந்த தலைமுறையினர் பயன்படுத்தும் சில்வர் பாத்திரங்கள் எத்தனை மாடல் வந்தாலும், ஒரு ரயிலடுக்கு பாத்திரத்திற்கு ஈடு கொடுக்க முடியாது”

  • News18
  • Last Updated :
  • Share this:
சிவகங்கையை சேர்ந்த மதுரவல்லி என்பவரது வீட்டில் 150 ஆண்டுக்கு முந்தைய ரயிலடுக்கு அமைப்பு கொண்ட பித்தளை பாத்திரத்தை மூன்று தலைமுறையாக பாதுகாத்து வருவது காண்போரை வியப்படைய வைத்துள்ளது.

சிவகங்கை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதுரவல்லி (84). இவரது வீட்டில் 150 ஆண்டுக்கு முந்தைய பாரம்பரிய பாத்திரம் ஒன்று உள்ளது. ரயிலடுக்கு என்று கூறப்படும் இந்த பாத்திரம் 14 பாகங்களைக் கொண்டது.

இந்த பாத்திரத்தின் வீடியோ சமீபத்தில் இணையதளங்களில் வைரலாக பரவியது.



இந்த தலைமுறையினர் பயன்படுத்தும் சில்வர் பாத்திரங்கள் எத்தனை மாடல் வந்தாலும், ஒரு ரயிலடுக்கு பாத்திரத்திற்கு ஈடு கொடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. இந்த பாரம்பரிய  பாத்திரத்தை மதுரவல்லி, அவரது தாய், தற்போது மகள் மீரா மருமகள் என மூன்று தலைமுறையாக  பொக்கிஷமாக இந்த குடும்பத்தினர் பாதுகாத்து வருகின்றனர்

10 பேருக்கு தேவையான 3 படி அரிசியில்  சாதம் சமைக்கும் பெரிய பாத்திரம், பொரியல், கூட்டு, அவியல் செய்ய என 3 அடுக்கு பாத்திரம், சாதம் வடிக்கும் சிப்பல், குழம்புசட்டி, காபி டவரா, டம்ளர் செட், இலுப்பைச் சட்டி, செம்பு, அரிசி அளவிடும் படி, பித்தளை டம்ளர் உள்ளிட்ட 14 வகையான சிறிய பாத்திரங்கள். இந்த ஒற்றை பாத்திரத்தில் அடங்கியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: