Home /News /tamil-nadu /

மாணவிகள் முன்பு பைக் சாகசத்தில் ஈடுபட்ட ரோமியோக்களை தேடும் போலீஸ்

மாணவிகள் முன்பு பைக் சாகசத்தில் ஈடுபட்ட ரோமியோக்களை தேடும் போலீஸ்

பைக் ஸ்டண்ட்

பைக் ஸ்டண்ட்

மாணவிகள் முன்பு பைக் சாகசங்களில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    பள்ளி கல்லூரி மாணவ களுக்கு முன்பு பைக் சாகசத்தில் ஈடுபட்டு கீழே விழுந்த இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கல்லூரி சாலையில்   பள்ளி கல்லூரி மாணவிகள் பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது இரு இளைஞர்கள் தங்களது DUKE சொகுசு இருசக்கர வாகனத்தில் மாணவிகள் முன்பு சாகசத்தில் ஈடுபட்டனர். காரைக்குடி கல்லூரி சாலையில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அதன்பின்பு கோட்டையூர் பகுதிக்குச் சென்று அங்கு பேருந்துக்காக காத்திருக்கும் மாணவிகள் முன்பு சாகசம் செய்துக் கொண்டிருந்த போது கீழே விழுந்தனர்.

    Also Read: கொரோனாவால் கல்லூரிகளுக்கு விடுமுறை: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மாணவ- மாணவிகள்- சென்னையில் அலைமோதிய கூட்டம்

    அதிர்ஷ்டவசமாக கீழே விழும் பொழுது பேருந்துக்கு காத்திருந்த மாணவிகளுக்கு பயணிகளுக்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த இளைஞர்கள் குறித்து காரைக்குடி அழகப்பாபுரம் காவல்துறையினரும் பள்ளத்தூர் காவல்துறையினரும் வண்டி பதிவு எண்ணை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதுபோல் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்து காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பைக் சாகசங்கள் குறையும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    செய்தியாளர் : முத்துராமலிங்கம் (காரைக்குடி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Bike race, College student, Police, Youths

    அடுத்த செய்தி