கொரோனா இல்லா கிராமத்தை உருவாக்கும் முயற்சியில் சிவகங்கை இளைஞர்கள்

கொரோனா இல்லா கிராமத்தை உருவாக்கும் முயற்சி: சிவகங்கை

சிவகங்கையில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கொரோனா இல்லாத கிராமமாக உருவாக்க மூலிகை சூப்-களை பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். உண்மை... உழைப்பு... உயர்வு... என்ற குழு மூலம் தொற்று பரவலை தடுத்து ஊருக்கு அரணாக விளங்குகின்றனர்.

 • Share this:
  கொரோனா முதல் அலையின் போது, நகரங்களில் தான் அதிக பாதிப்பு இருந்தது. ஆனால், இரண்டாவது அலையின் கோரதாண்டவத்தால் கிராமங்களிலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கானுர் கிராமத்திற்குள் தொற்று நுழையாத வண்ணம் அங்குள்ள இளைஞர்கள் அரணாக விளங்குகின்றனர்.

  500 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் இந்த கிராமத்தில், 8 ஆண்டுகளுக்கு முன்பு உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாட்ஸ்அப் குழு ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், ஒன்றிணைந்த இளைஞர்கள், கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் நோக்கிலும், மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மூலிகை சூப், விதவிதமாக வழங்கி வருகின்றனர்.

  செனையில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்த பொன்முத்தராமலிக்கம், கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான கானுருக்கே திரும்பினார். அவரின், கைப்பக்குவத்தில் தான் தற்போது சத்தான சூப் விநியோகிக்கப்படுகிறது.  அதிகாலை 4 மணிக்கே மூலிகை சூப், கடலை வகைகளை தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டு, 7 மணிக்குள் மொத்த கிராம மக்களுக்கும் அவை விநியோகிப்படுகின்றன. கொரோனா தடுப்பூசி போடும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அதற்கு முன்பு தங்களது கிராம மக்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில், மூலிகை சூப் இலவசமாக வழங்கப்படுவதாக குழுவினர் தெரிவிக்கின்றனர்.

  மேலும் படிக்க... கடலூரில் சோதனையின் போது பொய் கூறி சிக்கிய குடும்பத்தினரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எஸ்.பி...

  தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் கிராமத்திற்குள் கொரோனாவையே நுழைய விட மாட்டோம் என்ற உறுதியில் உண்மை... உழைப்பு... உயர்வு... குழுவினர் உள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: