சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள புதுவயல் அருகே,
புதுக்கோட்டை மாவட்ட சுதந்திரபுரத்தை சேர்ந்த உதயசூரியன்- புவனேஷ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 28 வயது மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர், கடந்த 16ம் தேதி புளியங்குடியிருப்பு பகுதியில் உள்ள கோவில் திருவிழாவில் அண்ணதானம் சாப்பிட சென்றார். இரவு நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், மறுநாள் அப்பகுதியில் உள்ள முந்திரிக்காட்டுக்குள் ஆடைகள் களையப்பட்ட நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை சந்தேக மரணம் என்ற அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், காரைக்குடி டி.எஸ்.பி., வினோஜி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் தேடி வந்தனர்.
அத்துடன், சிவகங்கையில் இருந்து வரவழைக்தப்பட்ட மோப்ப நாய் ராம்போ முந்திரி காட்டிற்கு வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து குற்றவாளி வாடையை டிராக் செய்து ஊருக்குள் வந்து குறிப்பிட்ட பகுதியில் நின்றது. அதை தொடந்து அந்த பகுதியில் அன்றைய தினம் யார்? யார் எல்லாம் வந்தார்கள் என சேகரித்து 7 பேரிடம் தொடர்ந்து விசாரணை செய்த போது, முன்னுக்கு பின் முரணாக பேசிய அப்பகுதியை சேர்ந்த ராமையா என்பவரின் மகன் தேவா(20) என்பவரை கைது செய்தனர்.
கூலி வேலை பார்க்கும் தேவா சம்பவத்தன்று அந்தப்பெண கோயிலில் சாப்பிட்டு விட்டு வீட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரிடம் பேச்சு கொடுத்து, பெண்ணை வலுக்கட்டாயமாக முந்திரிக்காட்டுக்குள் அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அந்தப்பெண் சத்தம்போடவே, கையால் வாயை பொத்தியும் துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்று முந்தி மரம் அருகில் போட்டுவிட்டு, எதுவும் தெரியாதது போல வீட்டுக்கு சென்றுள்ளார்.

காமுகனை கண்டுபிடித்த மோப்பநாய் ராம்போ
தலைமறைவானால் சந்தேகம் வந்திடும் என பயந்து, ஊருக்குள் எப்போதும் போலவே சகஜமாக இருந்துள்ளார். எனினும் மோப்ப நாய் வந்து தன்னை காட்டி கொடுத்து விடும் என தெரியாமல் வலம் வந்த அவர், போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.
Must Read : கோடநாடு கொலை வழக்கு : கோவையை சேர்ந்த அதிமுக பிரமுகரிடம் தனிப்படை போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து சாக்கோட்டை போலீசார் தேவாவிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், குற்றவாளியை பிடித்துக்கொடுத்த மோப்ப நாய் ‘ராம்போ‘வை பலரும் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர் - முத்துராமலிங்கம், காரைக்குடி. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.