Home /News /tamil-nadu /

13வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண்.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

13வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண்.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாலியல் தொந்தரவு

பாலியல் தொந்தரவு

sexual abuse | தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சிறுவன்களையும் விட்டு வைப்பதில்லை. சிவகங்கையில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்த 35 வயது பெண்ணிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    சிவகங்கையில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 35 வயது பெண்ணிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம்  அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

    சிவகங்கை மாவட்டம் கீழச்சேவல்பட்டி அருகேவுள்ள ஆவனிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் உதயவள்ளி. இவர் வீட்டு அருகே வசித்து வந்த 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுவன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த  சிறுவனின் பெற்றோர் கீழச்சேவல்பட்டி காவல் நிலையத்தில்  புகார் அளித்தனர். புகாரின் பேரில் உதயவள்ளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைதானார். சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

    ALSO READ |  நானும் திராவிடன் தான்... 2026ல் தமிழகத்தில் 150 தொகுதிகளை பாஜக பிடிக்கும்: அண்ணாமலை

    அந்த வழக்கானது சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.நீதிமன்றத்தில் உதயவள்ளி மீதான குற்றம் உறுதி செய்யப்படவே அவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பாபுலால் அதிரடி தீர்ப்பை வழங்கினார். இதனை தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    செய்தியாளர் : சிதம்பரநாதன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Crime News, Pocso, POCSO case, Sivagangai

    அடுத்த செய்தி