Home /News /tamil-nadu /

' டாக்டர் எங்கே? 'ரத்த கரை படிந்த தலகாணி' ... அரசு மருத்துவமனையில் நோயாளி வாக்குவாதம் 

' டாக்டர் எங்கே? 'ரத்த கரை படிந்த தலகாணி' ... அரசு மருத்துவமனையில் நோயாளி வாக்குவாதம் 

'ரத்த கரை படிந்த தலகாணி ... டாக்டர் இல்லை'.

'ரத்த கரை படிந்த தலகாணி ... டாக்டர் இல்லை'.

Manamadurai Hospital Viral Video | அரசு மருத்துவமனையில் ரத்த கரை படிந்த தலகாணி பெட்டில் படுக்க வைத்து சிகிச்சை அளித்தாக சிகிச்சைக்கு வந்த நோயாளி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இரவு நேரத்தில் சிகிச்சைக்கு வந்தவருக்கு ரத்தக்கரை படிந்த தலகாணியை வைத்து சுகாதாரம் இல்லாமல் சிகிச்சை அளித்த செவிலியர்கள் மீது சிகிச்சைக்கு வந்தவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், தாயமங்கலம் ரோட்டில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் வெளி நோயாளிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக 40க்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று  வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சிகிச்சைக்கு வருபவர்கள் பல மணி நேரம் காத்திருந்துதான் சிகிச்சை பெற்று வருவதாக குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில் பணி நேரத்தில் டாக்டர்கள் இருப்பதில்லை என்றும்  குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு  மானாமதுரையை சேர்ந்த சரவணன் என்பவர் இடுப்பு வலி சம்பந்தமாகவும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக மானாமதுரை அரசு மருத்துவனைக்கு வந்துள்ளார். ஒரு மணி நேரமாக காத்திருந்தும் டாக்டர்கள் வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவருக்கு செவிலியர்கள்  இசிசி எடுப்பதற்காக அவரை மருத்துவமனையில் உள்ள பெட்டில் (Bed ) படுக்க வைத்து உள்ளனர். பின்னர் இசிசி எடுத்து டாக்டருக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பி விளக்கம் கேட்டு அனுப்பி உள்ளனர்.



தன்னை இசிசி எடுக்க படுக்க வைத்த அந்த தலகாணி முழுவதும் ரத்தக்கரையுடனும் அதேபோல், பெட்டில் (BED ) விரிக்கப்பட்ட உரையும் சுகாதாரமற்ற முறையில் இருந்துள்ளது. இதனால் கோபமடைந்த சரவணன் ஒரு மணி நேரமாக காத்திருந்தோம் டாக்டர்கள் வரவில்லை என்றும் போதாத குறைக்கு ரத்தக் கறையுடன் சுகாதாரமற்ற முறையில் இப்படி சிகிச்சை ஏன் அளிகின்றீர்கள்.



மக்கள் வரிபணத்தில் தான் சம்பளம் வாங்குகின்றிர்கள் என்றும் கோபடைந்து ரத்தகரை இருந்த தலகாணி மற்றும் பெட்டில் விரிக்கப்பட்டு இருந்ததை வெளியில் எடுத்து போட்டு  காண்பித்தும் இசிசி எடுத்ததையும் டாக்டர் அனுப்புகிறார்கள் அப்ப டாக்டர் எங்கே என  கோபடைந்து செவிலியர்களிடம் கத்தி கேட்கும்  வீடியோ, வைரல் ஆகி வருகிறது. பின்னார் அவர் மதுரை தனியார் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டர்.

ALSO READ |  திருவள்ளூரில் கல்வி கற்க கட்டிடம் இல்லாமல் தவிக்கும் அரசுபள்ளி மாணவர்கள்... அதிகாரிகள் விரைந்து செயல்பட பொதுமக்கள் கோரிக்கை
 இவருக்கு முன்னால் வந்த  பெண்மணியும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து அவரும் காத்திருந்து தனக்குத் தானே புலம்பும் அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Sivagangai, Viral Video

அடுத்த செய்தி