Home /News /tamil-nadu /

நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடு?... கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட கிராம மக்கள்

நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடு?... கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட கிராம மக்கள்

Manamadurai: மானாமதுரை அருகே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரைக்கும் நகை அடகு வைத்து கடன் வாங்கியவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் தற்போது  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நகைகள் திருப்பி வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பசளை கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி சார்பில் 54  பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய பட்டியல் அனுப்பப்பட்டது. இதில் தற்போது 24 பயனாளிகளுக்கு  நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திருப்பி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், 5 சவரனுக்கு மேல் நகை கடன் பெற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த பலருக்கும், அரசு ஊழியர்களுக்கும், வெளியூரில் உள்ள நபர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக புகார் எழுந்தன. இதனால், ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கீழப்பசளை வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு   முற்றுகையிட்டனர்.

Must Read : திருவள்ளூர் அருகே எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தீ விபத்து... மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

இது குறித்து தகவல் அறிந்து வந்த மானாமதுரை போலீசார், மற்றும் வங்கி ஊழியர்கள், பொதுமக்களை சமாதானப்படுத்தி, நகைக்கடன் தள்ளுபடி  பட்டியலில் முறைகேடு இருப்பதை கண்டறிந்து ஆய்வு செய்து அவர்களின் பெயர் நீக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Published by:Suresh V
First published:

Tags: Gold loan, Manamadurai, Sivagangai

அடுத்த செய்தி