ரூ.200 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ வுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை - சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

வி.ஏ.ஓவுக்கு 4 வருட சிறை தண்டனை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே ரேசன் கார்டு வழங்க ரூ.200 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ வுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை ஊழல் லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

  • Share this:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே ரேசன் கார்டு வழங்க ரூ.200 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ வுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை ஊழல் லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பத்தூரை அடுத்துள்ள நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் விசாலாட்சி. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ரேசன் கார்டிற்காக விண்ணப்பித்திருந்த நிலையில், நடுவிக்கோட்டை கீழாயூர் வி.ஏ.ஓ வாக பணியில் இருந்த நாடிமுத்து விசாலாட்சியிடம் ரேசன் கார்டு வழங்க ரூ200 லஞ்சம் கேட்டுள்ளார்.

இது குறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் விசாலாட்சி புகார் தெரிவித்த நிலையில், அவர்களின் வழிகாட்டுதல்படி ரசாயனம் தடவிய 200 ரூபாய் நோட்டுகளை வி.ஏ.ஓ நாடிமுத்துவிடம் விசாலாட்சி கொடுத்துள்ளார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இந்த நிலையில் இந்த வழக்கானது சிவகங்கை ஒருங்கினைந்த வளாகத்தில் உள்ள ஊழல் லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில் வி ஏ.ஓ நாடிமுத்து மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 4 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.2 ஆயிரம்  அபராதமும் விதித்து நீதிபதி உதய வேலவன் தீர்ப்பளித்துள்ளார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: