Home /News /tamil-nadu /

சிவகங்கை நகராட்சி, பேரூராட்சி மன்றங்கள் - தேர்தல் முடிவுகள் - லைவ் அப்டேட்ஸ்

சிவகங்கை நகராட்சி, பேரூராட்சி மன்றங்கள் - தேர்தல் முடிவுகள் - லைவ் அப்டேட்ஸ்

சிவகங்கை

சிவகங்கை

Sivagangai District Election Results 2022: உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி விவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

    சிவகங்கை ( Sivagangai)  மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி/ வெற்றி நிலவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

    சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, மானாமதுரை என  மொத்தம் 4 நகராட்சிகளும்,  நாட்டரசன்கோட்டை, இளையாங்குடி, திருப்புவனம், கானாடுக்காத்தான், கோட்டையூர், கண்டனூர், பள்ளத்தூர், புதுவயல், திருப்பத்தூர், நெற்குப்பை மற்றும் சிங்கம்புணரி என 11 பேரூராட்சிகளும் உள்ளன.

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றிக்கனியை பறித்தவர்கள், கட்சிகளின் வெற்றி நிலவரம் குறித்த விவரங்களை விரிவாக தெரிந்துகொள்வோம்.

    திமுக: (96)

    சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரையில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை  நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது.

    திருப்புவனம், இளையான்குடி, நெற்குப்பை உள்ளிட்ட பெரும்பாலான பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியிருக்கிறது.  பள்ளத்தூரில் மட்டும் சுயேட்சைகள் அதிகளவில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

    திமுகவை பொறுத்தவரை மொத்தம் உள்ள  117 நகராட்சி வார்டுகளில் 48 நகராட்சி வார்டுகளிலும்,  284 பேரூராட்சி வார்டுகளில், 96 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது.

    அதிமுக: (43)

    தேவகோட்டை நகராட்சியில் மட்டும் அதிமுக கவனத்தை ஈர்க்கும் வகையில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அங்கு மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 10ல் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் 6 வார்டுகளிலும், அமமுக, திமுக தலா 5 வார்டுகளிலும், ஒரு இடத்தில் சுயேட்சையும் வெற்றி பெற்றிருக்கின்றன. தேவகோட்டையை பொறுத்தவரையில் அதிமுக - அமமுக கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக - அமமுக கூட்டணி ஏற்பட்டால் தேவகோட்டை நகராட்சியை இக்கூட்டணி கைப்பற்றலாம்.

    அதிமுக 27 நகராட்சி வார்டுகள், 16 பேரூராட்சி வார்டுகள் என ஒட்டுமொத்தமாக  43 வார்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

    காங்கிரஸ்: (26)

    திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 12 நகராட்சி வார்டுகளிலும், 14 பேரூராட்சி வார்டுகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

    பாஜக: (04)

    தனித்து களம் கண்டுள்ள பாஜக மானாமதுரை நகராட்சியில் ஒரு வார்டிலும்,  கானாடுகாத்தான், திருப்புவனம், புதுவயல் பேரூராட்சிகளில் தலா ஒரு வார்டில் என மொத்தம் 4 வார்டில் வெற்றி பெற்றுள்ளது.

    தேவகோட்டை நகராட்சியில் பாஜக போட்டியிட்ட 21 இடங்களில் 20 இடங்களில் டெப்பாசிட் இழந்துள்ளது. தேவகோட்டை நகராட்சியில் 27 வார்டுகளில் 21 வார்டுகளில் தனித்து போட்டியிட்டு மொத்தம் 686 வாக்கள் மட்டுமே பாஜக பெற்றுள்ளது. இதில் 3 வார்டுகளில் தலா 6 வாக்குள் மட்டுமே பெற்றுள்ளது.

    நாம் தமிழர்: (0)

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இளையான்குடி அருகேயுள்ள ஆனையூரில் பிறந்தவருமான சீமானுக்கு சிவகங்கை மாவட்டம் ஏமாற்றத்தை தந்துள்ளது. இம்மாவட்டத்தில் ஒரு வார்டில் கூட நாம் தமிழர் வெற்றி பெற முடியாமல் போயுள்ளது.

    அமமுக: (11)

    தனியாக களம் கண்ட அமமுக, அதிகபட்சமாக தேவகோட்டை நகராட்சியில் 5 வார்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அதிமுக தேவகோட்டை நகராட்சியை கைப்பற்ற அமமுகவின் துணை தேவை என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    அமமுக கட்சியானது 8 நகராட்சி வார்டுகளிலும், 3 பேரூராட்சி வார்டுகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

    சுயேட்சைகள்: (54)

    இந்த தேர்தலில் சுயேட்சைகள் அதிகளவில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.  20 நகராட்சி வார்டுகளிலும், 34 பேரூராட்சி வார்டுகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

     





















    நகராட்சிகள் (3) :
    வ.எண்நகராட்சி
    1சிவகங்கை
    2காரைக்குடி


    3

    4


    தேவக்கோட்டை

    மானாமதுரை


























































    பேரூராட்சிகள் (12) :
    வ.எண்பேரூராட்சி
    1நாட்டரசன்கோட்டை
    2இளையாங்குடி
    3திருப்புவனம்
    4கானாடுக்காத்தான்
    5கோட்டையூர்
    6கண்டனூர்
    7பள்ளத்தூர்
    8புதுவயல்
    9திருப்பத்தூர்
    10நெற்குப்பை
    11சிங்கம்புணரி

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Local Body Election 2022, Sivagangai

    அடுத்த செய்தி