முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பட்ட பகலில் அமமுக மாநில வழக்கறிஞர் பிரிவு துனை செயலாளருக்கு அரிவாள் வெட்டு - டிடிவி தினகரன் கண்டனம்!

பட்ட பகலில் அமமுக மாநில வழக்கறிஞர் பிரிவு துனை செயலாளருக்கு அரிவாள் வெட்டு - டிடிவி தினகரன் கண்டனம்!

பட்ட பகலில் அமமுக மாநில வழக்கறிஞர் பிரிவு துனை செயலாளருக்கு அரிவாள் வெட்டு - டிடிவி தினகரன் கண்டனம்!

பட்ட பகலில் அமமுக மாநில வழக்கறிஞர் பிரிவு துனை செயலாளருக்கு அரிவாள் வெட்டு - டிடிவி தினகரன் கண்டனம்!

மானாமதுரையில் பட்ட பகலில் அமமுக மாநில வழக்கறிஞர் பிரிவு துனை செயலாளர் அரிவாளால் வெட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தை சேர்ந்தவர் குரு.முருகானந்தம். இவர் அமமுக மாநில வழக்கறிஞர் பிரிவு துனை செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார்.

வழக்கறிஞரான இவர் மானாமதுரை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளில் ஆஜராகி வாதாடி வருகிறார்.

இந்நிலையில், மானாமதுரை நீதிமன்றம் அருகே சிவகங்கை சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் குரு.முருகானந்தம் இருந்த போது, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் அரிவாள்களுடன் அலுவலகத்திற்குள் கண்ணாடியை உடைத்து  குரு.முருகானந்தத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தாங்கள் வந்த வாகனத்திலேயே தப்பிச் சென்றனர்.

இச்சம்பவத்தில் முருகானந்தத்திற்கு  தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்து ரத்தம் கொட்டியது. முருகானந்தம் தப்பிக்க முயன்றும் அக்கும்பல் அலுவலகத்திற்கு உள்ளேயே வைத்து அவரை வெட்டியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இச்சம்பவத்தை பார்த்த அங்கிருந்த மக்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் வேன் மூலம் குரு.முருகானந்தத்தை சிகிச்சைக்காக மானாமதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலத்த காயம் என்பதால் அங்கு முதலுதவி செய்யபட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மானாமதுரை போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட சிவகங்கை எஸ்பி செந்தில்குமார், குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Also read: வீடு புகுந்து இளம்பெண் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை... தேவையற்ற உறவால் நேர்ந்த சோகம்

மேலும் குரு.முருகானந்தம் அலுவலகம் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மானாமதுரையில் பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் இப்பகுதியில் மக்களிடம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்திற்கு அமமுக பொது செயலாளர் டி.டி வி தினகரன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் திரு குரு. முருகானந்தம் அவர்கள் மீது மானாமதுரையில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்குக் காரணமான சமூக விரோதிகள் மீது காவல்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு.முருகானந்தம் விரைவில் முழு நலம் பெற்று வர பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் - சிதம்பரநாதன்

First published:

Tags: AMMK, Crime News, News On Instagram, Sivagangai, TTV Dinakaran