இந்திய வேளான் ஆராய்ச்சி மையம் சார்பில் சிவகங்கை நறுமண பூங்காவில் இயற்கை விவசாயம் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டி அருகே அமைந்துள்ள சிவகங்கை மத்திய நறுமன பூங்காவில், இந்திய வேளான் ஆராய்ச்சி மையம் சார்பில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி மற்றும் இலவச விதை, உரம் வழங்கும் நிகழ்ச்சி முதன்மை விஞ்ஞானி தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கையை அடுத்துள்ள முத்துப்பட்டி கிராமத்தில் மத்திய அரசு தொழில் வாரியத்துறைக்கு சொந்தமான மத்திய நறுமன பூங்காவானது செயல்பட்டு வருகிறது. இங்கு இப்பகுதியில் விளைவிக்கப்படும் மிளகாய், மஞ்சள் உள்ளிட்ட நறுமன பொருட்களை மதிப்புகூட்டு பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்தும் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தி அதன் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதாகும்.
இந்நிலையில் இந்த மத்திய நறுமன பூங்கா நிர்வாகம் மற்றும் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் இந்திய வேளான் ஆராய்ச்சி மையம் இனைந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்வது குறித்த ஒரு நாள் இலவச பயிற்சியை வழங்கியதுடன் இந்த பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு இலவச விதை மற்றும் இயற்கை உரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வேளான் ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார் மற்றும் பூங்கா மேலாளர் போஸ் ஆகியோர் பங்கேற்று விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து எடுத்துரைத்ததுடன் இலவச பொருட்களையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.