முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காரைக்குடி அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழா...!

காரைக்குடி அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழா...!

மீன்பிடி திருவிழா

மீன்பிடி திருவிழா

Karaikudi Fishing Festival | தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அடுத்து அதிக கண்மாய்கள் கொண்ட மாவட்டமாக சிவகங்கை விளங்குகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காரைக்குடி அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில், ஏராளமானோர் திரளாக கண்மாயிக்குள் களமாடி, மீன்களை அள்ளிச் சென்றனர்.

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அடுத்து அதிக கண்மாய்கள் கொண்ட மாவட்டமாக சிவகங்கை விளங்குகிறது. இந்நிலையில் காரைக்குடி அருகே உள்ள வஞ்சினிபட்டி, ஆத்தங்குடி கிராமங்களில் உள்ள கண்மாய்கள் நிரம்பி, தற்போது வற்றும் நிலையில் உள்ளதால் மீன்பிடி திருவிழா களைகட்டியது. மீன்பிடிக்க அனுமதி வழங்கியதும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்றனர்.

குளங்கள், கண்மாயில் இறங்கி மீன் பிடிக்கும் போது சேறும் சகதியும் உடம்பில் படும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இதனால், தொன்றுதொட்டு இந்த விழாவை நடத்துவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கண்மாயில் பாரம்பரிய முறையில் கூடைகள் மூலம் வலை வீசி, இளைஞர்கள் மீன்களை அள்ளிச் சென்றனர். அதேவேளையில், சிறுவர்கள், பெண்கள் கரையோரம் துள்ளிக் குதித்த மீன்களை பிடித்தனர்.

முன்னோர்கள் வகுத்த வழியில் மீன்பிடி திருவிழா மூலம் விவசாயம் செழிக்கவும், பாரம்பரியத்தை பறைசாற்றவும் இதில் பங்கேற்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

Also read... ஆற்காட்டில் பிரபல துணிக்கடையில் தீ விபத்து - ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

மீன்பிடித் திருவிழாவின் போது, திரளான மக்கள் கண்மாய் சேற்றில் மிதிக்கும் போது, மீன் முட்டைகள் சகதியில் சென்று தங்கிவிடும். நாளடைவில் முட்டைகள் மூலம் குஞ்சுகள் வெளிவந்து மீண்டும் கண்மாயில் மீன் வளம் பெருகும் என்ற நோக்கில் பாரம்பரியமாக இந்த மீன்பிடி திருவிழா நடத்துவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

-செய்தியாளர்: முத்துராமலிங்கம்.

First published:

Tags: Karaikudi, Sivagangai