சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பசலை தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி குறித்து பயனாளிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இருபட்டியல்களை வெளியிட்டுள்ளனர். முதல் பட்டியலில் இடம் பெற்றவர்கள், இரண்டாவது பட்டியலில் இடம் பெறவில்லை.
மக்கள் அடகு வைத்த நகை வேறு, தள்ளுபடி வழங்கப்பட்டதால் திருப்பி வழங்கப்படும் நகைவேறு என மக்கள் கூறுகின்றனர். மக்களிடம் அடகு பெறப்பட்ட நகைகளை தனியார் நிதி நிறுவனத்தில் மறுஅடகு வைத்துள்ளனர். இதுபோன்ற குளறுபடி நகைக்கடன் தள்ளுபடியில் நடந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கலெக்டர் மதுசூதனரெட்டியிடம் புகார் கொடுத்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் பேசுகையில் , தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடியில் ஏகப்பட்ட முறைகேடு நடந்துள்ளது. ஒரே நபருக்கு நான்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிபவருக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் பலர் பயன் பெற்றுள்ளனர். பலரது நகைகள் வெளியே நிதி நிறுவனங்களில் மறு அடகு வைத்துள்ளனர்.
விசாரணைக்கு வந்த அதிகாரிகள் கூட்டுறவு கடன் சங்கத்தினருக்கே ஆதரவாக உள்ளனர். நகைக்கடன் தள்ளுபடியில் அரசு ஊழியர்கள், கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் பெண் பெயரில் 4 நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.பலரது நகைகள் மாற்றி வழங்கப்படுகிறது. இதுபோன்ற குளறுபடி குறித்து கேட்டால் உரிய பதில் வழங்கப்படுவதில்லை. விசாரணை அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்துள்ளனர்.
செய்தியாளர் : சிதம்பரநாதன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Gold, Gold loan, Sivagangai