அதிகாலையில் கைவரிசை காட்டும் கொள்ளையர்கள்.. சிசிடிவியில் பதிவான காட்சிகள் - அச்சத்தில் சிவகங்கை மக்கள்

கொள்ளை சம்பவம்

சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

  • Share this:
    தேவகோட்டை பகுதிகளில் தொடர்  வழிப்பறி மற்றும் வீட்டின் கதவை உடைத்து திருடும் கொள்ளையர்களால் பொதுமக்கள் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.    

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கன்னுப்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன்(வயது 68) - சந்திரா(58) தம்பதியினர். ராஜேந்திரன் அந்தப்பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். உறவினரின் சுபநிகழ்ச்சிக்கு செல்வதற்காக தனது மனைவியுடன் அதிகாலையில் கன்னுப்பிள்ளை தெருவில் நடந்துச் சென்றுள்ளார்.  அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவரையும் தாக்கி சந்திரா அணிந்திருந்த தாலி செயின் உள்பட 14 பவுன் தங்கநகைகளை பறித்துச் சென்றுள்ளனர்.

    Also Read: இனிமேல் குடிக்க மாட்டேன்னு சொல்லுங்க ஜாமீன் பத்தி யோசிக்கலாம் - குடிமகன்களுக்கு நீதிமன்றம் விதித்த நிபந்தனை

    இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காரைக்குடி வடக்கு குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது முக்காடு போட்டு இருவர் இருசக்கர வாகனத்தில் செல்வது பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதேபோல் பள்ளி ஆசிரியர் ஒருவர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் நடந்துள்ளது.  தேவகோட்டை  தில்லைநகர் முதல் வீதியில் வசிப்பவர்  சசிக்குமார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இன்று காலை ஆண்டாவூரணியில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.

    வீட்டில்  யாரும் இல்லாததை அறிந்த கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.  திருமண நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய ஆசிரியர் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.  இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது  வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு  பல லட்சம் மதிப்புள்ள தங்க வெள்ளி பணம் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    Also Read:  சண்டாவாக மாறிய அண்டா சாமியார்.. கெட்டப் மன்னன் லீலைகள் அம்பலம்

    கொள்ளை சம்பவம் குறித்து தேவகோட்டை நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து  தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் ரமேஷ், ஆய்வாளர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காரைக்குடி, தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறி வீடு உடைத்து திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்களால்  பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    செய்தியாளர்: முத்துராமலிங்கம் (காரைக்குடி)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Ramprasath H
    First published: