திருக்குறள்களை தலைகீழாக எழுதி உலக சாதனை நிகழ்த்திய  கார் ஓட்டுநர்!

திருக்குறள்களை தலைகீழாக எழுதி உலக சாதனை நிகழ்த்திய  கார் ஓட்டுநர்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கார் ஓட்டுநர்  1,330 திருக்குறள்களையும் 17 மணி 19 நிமிடங்களில்  தலைகீழாக எழுதி சாதனை படைத்து  சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.

  • Share this:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நாட்டுச்சேரியைச் சேர்ந்தவர்  கார்த்தியமூர்த்தி. பிளஸ் 1 வரை படித்த இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் விட்டு, கோவையில் கார் ஓட்டுநராக உள்ளார். இருந்தபோதிலும் தமிழ் மீதான பற்றால் திருக்குறள் போன்ற தமிழ் நூல்களை படித்து வந்துள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர் காரில் சென்றபோது ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆம்புலன்ஸ் எழுத்து தலைகீழாக இருப்பதை கண்டார்.

பொதுவாக முன்புறம் செல்லும் வாகனங்களின் கண்ணாடியில் ஆம்புலன்ஸ் எழுத்து நேராக தெரிவதற்காக, ஆம்புலன்ஸ் எழுத்து தலைகீழாக எழுதப்படுகிறது.இதை பார்த்த கார்த்தியமூர்த்தி அதேபோல் திருக்குறளையும் தலைகீழாக எழுத முயற்சி செய்தார். அதாவது கண்ணாடியில் எழுதிய எழுத்துகளை பார்த்தால் நேராக தெரியும் அதன் அடிப்படையில் சில மாதங்களிலேயே 1,330 குறள்களையும் தலைகீழாக எழுத கற்றுக் கொண்டார்.

முதலில் 5.4 செ.மீ., அகலம், 6.58 மீ. நீளம் கொண்ட சிறிய தாளில் 45 நாட்களில் ஓய்வு நேரங்களில் 1,330 திருக்குறள்களையும் எழுதினார். மேலும் இதனை உலக சாதனையாக மாற்றும் முயற்சியாக நேற்று காரைக்குடியில் அரியக்குடி சாலை தெ.நா.அரங்கில்  சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம், வள்ளுவர் பேரவை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் திருக்குறள்களை தலைகீழாக எழுதினார். சுமார் நேற்று காலை 11 .30 மணி அளவில் தொடங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க..இனி சாதாரண பட்டன் செல்போனில் பாடம் படிக்கலாம்... எப்படி? 

தஞ்சாவூரில் மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக தலைவர் போக்சோவில் கைது...

இதில் 1,330 குறள்களையும் 24 மணி நேரத்திற்குள் எழுத முயற்சித்து கைகளில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல்  17 மணி  19 நிமிடங்களில் எழுதி சாதனை படைத்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார் .சாதனை படைத்த கார் ஓட்டுநர் கார்த்திய மூர்த்திக்கு சான்றிதழ் , அடையாள அட்டை , கேடயம் பரிசாக அளிக்கப்பட்டது.

செய்தியாளர் : முத்துராமலிங்கம், காரைக்குடி
Published by:Vaijayanthi S
First published: