Home /News /tamil-nadu /

கொந்தகை அகழாய்வு தளத்தில் ஒரே குழியில் 10 முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

கொந்தகை அகழாய்வு தளத்தில் ஒரே குழியில் 10 முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

முதுமக்கள் தாழி

முதுமக்கள் தாழி

Sivagangai Kondhagai | தமிழர்களின் பண்டைய வரலாற்றை அறிவதற்காக சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

  • News18
  • Last Updated :
கொந்தகை அகழாய்வுத் தளத்தில் ஒரே குழியில் அருகருகே பத்து முதுமக்களின் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் பண்டைய வரலாற்றை அறிவதற்காக சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், ஏற்கெனவே 7 கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின.

இதையடுத்து கொந்தகை அகழாய்வு தளத்தில் நடைபெற்ற 3ஆம் கட்ட அகழாய்வுப் பணியின்போது, ஒரே குழியில் அருகருகே 10 முதுமக்களின் தாழி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆராய்ச்சியாளர்கள் இடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கீழடி, அகரம் மற்றும் கொந்தகையில் தொடர்ந்து அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.

Also read... கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் வங்கி கணக்கிலிருந்து மாயமான 8.5 லட்சம்- சிக்கிய வடநாட்டு ஊழியர்கள்

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில், மத்திய தொல்லியல்துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வுப் பணியில், சங்க கால வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பானைகள், நூல்களை பிரிக்கும் தக்களி சாதனம், விலங்கு எலும்புகள் போன்றவைகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Sivagangai

அடுத்த செய்தி