பெண் ஊராட்சி மன்ற தலைவரை சாதி ரீதியில் திட்டி வம்பிழுத்ததால் பதற்றம்!

பிரமனூர்

ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை  ஆபாச வார்த்தையில் திட்டியும்  கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர் .

 • Share this:
  தலித் பெண் ஊராட்சி மன்ற தலைவரை ஊராட்சி பணி செய்ய விடாமல்,தடுத்து தகராறு செய்த 6 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம்  அருகே பிரமனூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பழனிச்செல்வம் முருகன்.  கடந்த  ஊராட்சி மன்ற தேர்தலில் பொது தொகுதியில்  போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் இவரது பகுதி மக்களுக்கு வீடுகளுக்கு மத்திய அரசின் குடிநீர் குழாய் இணைப்பு திட்டத்தின் கீழ் வேலை நடந்துகொண்டிருக்கிறது.

  அப்போது மாற்று சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர்கள்  மது அருந்தி விட்டு வந்து  எப்படி ரோடு உடைத்து எப்படி வேலை பார்ப்பாய் என்றும் நீ ஒரு தலித் பெண்  என்றும் கேள்வி கேட்ட அவர்கள், வேலையை தடுத்து நிறுத்தியதுடன்,  ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை  ஆபாச வார்த்தையில் திட்டியும்  கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர் . பின்பு சம்பவ இடத்தில்   இரு சமூகத்தைத்  சேர்ந்த மக்கள் கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  Also Read:   அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்!

  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை. மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார், மானாமதுரை டி எஸ்.பி .சுந்தரமாணிக்கம் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கணவர்  6 பேர் மீது புகார் அளித்துள்ளார். இது குறித்து 5 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பழையனுர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

  செய்தியாளர் சிதம்பரநாதன், மானாமதுரை
  Published by:Arun
  First published: