• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பிரசவத்தின்போது ஆசிரியை மரணம் - தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

பிரசவத்தின்போது ஆசிரியை மரணம் - தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

ஆசிரியை பாரதி

ஆசிரியை பாரதி

இரண்டாவது பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    சிவகங்கையில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது ஆசிரியை உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

    சிவகங்கை அருகே உள்ள கோமாளி பட்டி ஊராட்சி பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக  பணியாற்றி வந்தவர் பாரதி. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது பிரசவத்திற்காக சிவகங்கை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று பாரதிக்கு பிரசவத்தின் போது குழந்தை பிறந்தநிலையில்  சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்,

    ஆசிரியை பாரதியின் இறப்பு செய்தியைக் கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது மரணத்திற்கு மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையே காரணம் எனக் கூறி  மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மருத்துவமனை வளாகமே பரபரப்பாக காணப்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் ஆசிரியரின் உறவினர்களிடம் பேச முயற்சித்தனர்.

    Also Read:  நிர்வாண கோலத்தில் தகராறு செய்த டிராபிக் போலீஸ்.. அலறியடித்து ஓடிய பெண்கள் - சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளான குடியிருப்புவாசிகள்

    இந்த சம்பவம் குறித்து வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனை விரைந்த  வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆசிரியரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: சிதம்பரநாதன் (சிவகங்கை)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: