சிவகங்கையில் கொலை செய்யப்பட்ட நண்பன் ஆன்மா சாந்தியடைய எதிரியை கொலை செய்ததாக கைதானவர் போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருமணவயல் கிராமத்தில் கடந்த 21ம் தேதி உணவகத்தில் இரவு சாப்பாடு பார்சல் வாங்க சிறுவத்தி கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம் (25) என்பவர் வந்துள்ளார் அப்போது அங்கு பாவனக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பிரபு (28), கோட்டூர் கிராமத்தை மணி (25) இவரும்ராஜாங்கத்திடம் தகறாறு செய்து மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜாங்கத்தை குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியானார் .
கொலை வழக்கு சம்பந்தமாக பிரபுவை வேலாயுதபட்டனம் போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். விசாராணையில் ஜூன் மாதம் நடந்த கொலை பழிவாங்க இந்தக்கொலை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. சிறுவத்தி கிராமத்தை சேர்ந்தவர் சிவா வயது 32. இவர் அந்தப்பகுதியில் பெயின்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திவ்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தேவக்கோட்டையில் இருந்து சிறுவத்தி கிராமத்துக்கு திரும்பிக்கொண்டிருந்த சிவாவை வழியில் இடைமறித்த ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவ்வழக்கில் தொடர்புடைய ராஜாங்கம் சிறை சென்று தற்போது ஜாமீனில் வந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட நண்பன் சிவா ஆன்மா சாந்தியடையவும் ,அவரது கொலைக்கு பலி வாங்கவும் வழக்கில் தொடர்புடைய ராஜாங்கத்தை கொலை செய்தோம் என கைதானவரிடம் நடத்திய விசாரனையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து பிரபுவை கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மற்றொரு குற்றவாளியான கோட்டுர் மணி சிவகங்கை நீதிமன்றத்தில் நீதிபதி முன்னியில் சரணடைந்தார் சிறையில் அடைத்தனர் .
செய்தியாளர்: முத்துராமலிங்கம் (காரைக்குடி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.