முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு தமிழக இளைஞரின் வித்தியாசமான அன்பளிப்பு!

இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு தமிழக இளைஞரின் வித்தியாசமான அன்பளிப்பு!

நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு எனது அன்பளிப்பாக இந்த ஓவியத்தை வரைந்து உள்ளேன் என்றார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவின் நூறாண்டு கால ஒலிம்பிக் கனவை நிறைவேற்றிய நீரக் சோப்ராவுக்கு வித்தியாசமான அன்பளிப்பை தந்திருக்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த இயற்கை ஓவியர் கார்த்தி, இலைகள் மற்றும் பழங்களில் ஓவியம் வரைவார். உலகத்திலே பழங்களில் ஓவியம் வரைவது ஒரு சிலரே. இவர் ஆப்பிள் பழத்தில் வரையும் ஓவியத்திற்கு தனி மதிப்பு உண்டு. இவரது ஓவியங்களை இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பலரும் விரும்பி வாங்குவார்கள்.

இந்த வகையில் தற்போது ஜப்பானில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று இந்தியாவின் நூறாண்டு கால கனவை நிறைவேற்றிய தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு தனது ஓவியக்கலையின் வாயிலாக அவரது படத்தை முழுவதுமாக ஆப்பிள் பழத்தில் வரைந்து அன்பளிப்பாக செலுத்தியுள்ளார் இயற்கை ஓவியர் கார்த்தி.

Also Read: 2050ல் கிடையாது, 2030லேயே பூமிக்கு ஆபத்து தான் – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

இது குறித்து இயற்கை ஓவியர் கார்த்தி கூறுகையில் இந்த வருடம் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு எனது அன்பளிப்பாக இந்த ஓவியத்தை வரைந்து உள்ளேன் என்றார்.

கார்த்தியின் ஆப்பிள் ஓவியம்

23 வயதாகும் நீரஜ் சோப்ரா, 120 ஆண்டுகாலமாக தடகளத்தில் தங்கப் பதக்கத்துக்காக ஏங்கித் தவித்த இந்தியர்களை நிம்மதியடையச் செய்திருக்கிறார். மேலும் தனி நபர் பிரிவில் அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் நீரஜ் படைத்திருக்கிறார்.

Also Read:   சிவகங்கையில் திமுகவினரிடையே கைகலப்பு.. பல லட்சம் மதிப்பிலான பணிகளுக்கான ஏலத்தில் ஒருவருக்கு மண்டை உடைப்பு!

ஏற்கனவே ஆசிய சாம்பியன், காமன்வெல்த் சாம்பியன், உலக ஜூனியர் சாம்பியன் போன்ற பட்டங்களை வென்றிருக்கும் நீரஜ் சோப்ரா, இந்த சாதனைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒலிம்பிக் போட்டியிலேயே தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பின்னர் எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை என தெரிவித்த நீரஜ் சோப்ரா, தலையணைக்குள் தங்கப் பதக்கத்தை வைத்து இரண்டொரு மணிநேரம் மட்டுமே தூங்கியதாக தெரிவித்தது நினைவுகூறத்தக்கது.

First published:

Tags: Sivagangai, Tokyo Olympics