அரசு நிலத்தை மீட்ட இடத்தில் வளர்ந்து நின்ற தென்னை, கொய்யா மரங்களை வேருடன் அதிகாரிகள் பிடுங்கியதால் இயற்கை ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கோட்டையிருப்பு கிராமத்தில் 5 ஏக்கர் அரசு நிலத்தில் 30 ஆண்டுகாலமாக கலைச்செல்வன் என்பவர் தென்னை, கொய்யா, வாழை மரங்களும் கத்தரி, வெண்டை தோட்டம் அமைத்து விவசாயம் செய்து தனது அனுபவத்தில் பயன்படுத்தி வந்துள்ளார்.
அதிகாரிகள் நீர்பிடிப்பு பகுதியில் அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த போது அதிகாரிகளிடம் நடந்த பேச்சுவார்த்தை இறுதியில் இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள் மரங்களை அழிக்க வேண்டாம் என கலைச்செல்வன் கூறினார்.
Also Read:
அரசு உயர் அதிகாரி துன்புறுத்தியதாக கூறி முகத்தில் மண்ணை எறிந்த ஜூனியர் பெண் அதிகாரி.. வைரல் வீடியோ..
இதை பொருட்படுத்தாத வருவாய்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 ஏக்கரில் வளர்ந்துள்ள தென்னை, கொய்யா , வாழை, வேப்பமரம் , மற்றும் கத்தரி ,வெண்டி செடிகளையும் வேருடன் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பிடிங்கி எரிந்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது...
மரங்கள் அழிவதை பார்த்த கலைச்செல்வன் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழந்தார். கணவன் மயங்கி விழந்ததை கேள்விப்பட்ட மனைவி அமிர்தவள்ளி கணவனின் நிலையை கண்டு அவரும் மயங்கி விழந்தார். இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளனர் .
Also Read:
திடீரென திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. மணமகன் வீட்டாரை அடித்துவிரட்டிய பெண் வீட்டார்
பிடிங்கி எரிந்த கொய்யா மரத்தில் காய்திருந்த கொய்யா பழங்களை அதிகாரிகள் ருசித்து சாப்பிட்டனர். ஆக்கரமிப்பு நிலங்களில் இருந்த பயன் தரும் மரங்களைஅதிகாரிகள்அழித்தது இயற்கை ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
அரசியல் பழிவாங்கல்?
இயற்கை வளங்களை அரசே அழிக்கும் அவல நிலையை இப்போது தான் பார்ப்பதாகவும், மக்களுக்கு பலன் தரக்கூடிய பழ வகை மரங்களை அழிப்பது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது எனவும் இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதே நேரத்தில் இது பழிவாங்கும் செயல் எனவும், தன்னை எதிர்த்து போட்டியிட்டவர் என்ற அடிப்படையிலேயே அதிமுகவைச் சேர்ந்த கலைச்செல்வனின் இடத்தை அதிகாரிகளின் துணையோடு மீட்டிருப்பதாகவும் கோட்டையிருப்பு ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் ராமசாமி தெரிவித்தார்.
முத்துராமலிங்கம் - காரைக்குடிஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.