ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒரு வாக்குக் கூட பெறாத மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்

ஒரு வாக்குக் கூட பெறாத மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சிவகங்கை 1வது வார்டில் திமுக வேட்பாளர் மகேஷ்குமார் 434 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் செங்கோல் ஒரு வாக்குகளை கூட பெறவில்லை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சிவகங்கை நகராட்சியின் 1வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை.

  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பல இடங்களில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒருசில இடங்களில் வெற்றி பெற்று பிற இடங்களில் முன்னிலையிலும் உள்ளது. விடுதலை சிறுத்தைகள்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, பாஜக, காங்கிரஸ், அமமுக போன்ற கட்சிகளும் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்றுள்ளன.

  சிவகங்கை நகராட்சிக்கான தேர்தலில் மொத்தமுள்ள 27 இடங்களில் திமுக 11 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. அதிமுக 5 இடங்களிலும் சுயேட்சை 5 இடங்களிலும் அமமுக 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் சிவகங்கை நகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

  இதில் சிவகங்கை 1வது வார்டில் திமுக வேட்பாளர் மகேஷ்குமார் 434 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் செங்கோல் ஒரு வாக்குகளை கூட பெறவில்லை. இதேபோல், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகேய துரை 6 வாக்குகளை பெற்றார்.

  செய்தியாளர்: சிதம்பரம் - சிவகங்கை

  Published by:Murugesh M
  First published:

  Tags: Kamal Haasan, Local Body Election 2022, Makkal Needhi Maiam, Sivagangai