குழந்தைகள் விளையாடுவது, பயிற்சி அளிப்பது. 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவித்திறன் பிரச்னையால் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கிறது உலக சுகாதார மையம். குழந்தைகளின் செவித்திறன் பிரச்னைகளுக்கு பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே முக்கிய காரணம். இதனால், பிறக்கும் குழந்தைக்கு ஏற்படும் செவித்திறன் குறைபாடுகள் உடனடியாக கண்டறியப்படுவதில்லை. இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக
சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு பிறக்கும் குழந்தைகளை முழுமையாக பரிசோதனை செய்து, செவித்திறன் குறைபாடு இருந்தால், 'காக்ளியர் இம்ப்ளான்ட்' சிகிச்சை அளிக்க தொடங்கி விடுகின்றனர்.
கேட்கும் திறனற்ற, குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் 'காக்ளியர் இம்ப்ளான்ட்' கருவியை பொருத்துவதன் மூலம் அந்தக் குழந்தை வாழ்நாள் முழுவதும் கேட்கும் திறன் தொடர்பான சிரமங்கள் இன்றி வாழ முடியும், தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கு 12 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று நிலையில், முதல்வர் காப்பீட்டு திட்டம் மூலம், இச்சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் மட்டும் இது வரை 81 குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளான்ட் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்ல சிகிச்சை அளித்து ஒரு வருடத்தில் இருந்து 2வருடம் வரை பேச்சு பயிற்சி உள்ளிட்டவையும் அளிக்கப்படுகிறது.
தனியார் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு கூட முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிவகங்கை அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிறக்கும் போதே குழந்தைகளுக்கு ஏற்படும் செவித்திறன் குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையாக சிகிச்சை அளித்தால் குணப்படுத்தி விட முடியும் என்பதற்கு இங்கு சிகிச்சை பெற்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் குழந்தைகளே சாட்சி. நியூஸ் 18 செய்திகளுக்காக செய்தியாளர் சிதம்பரம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.