• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கிராமத்துக்கு வந்த அரசுப் பேருந்துக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!

கிராமத்துக்கு வந்த அரசுப் பேருந்துக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!

இடைகாட்டூர்

இடைகாட்டூர்

சிவகங்கையில் இருந்து  இடைகாட்டூருக்கு  புதிதாக பேருந்து சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

  • Share this:
    முதல் முறையாக கிராமத்துக்கு வந்த அரசுப் பேருந்துக்கு இடைகாட்டூர் கிராமத்தில் ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்றனர். மேலும் மகிழ்ச்சியில் சிறிது துராம் பேருந்தில் ஏறி பயணம் செய்தனர்.

    சிவகங்கை மாவட்டம்   மானாமதுரை அருகே உள்ளது இடைக்காட்டூர் கிராமம். இங்கு புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர்  திருத்தலம், மற்றும் சித்தர் கோவில் உள்ளது .

    மேலும் இடைகாட்டூரில் இருந்து சிவகங்கை செல்வது என்றால்  தனியார் பேருந்தை மட்டுமே நம்பி இத்தனை ஆண்டுகளாக இருந்தனர்.  அரசு பேருந்து கேட்டு பல ஆண்டுகளாக கிராம மக்கள் போராடி வந்தனர்.

    Also Read: தாலிபான்களால் இந்தியர்கள் கடத்தல்?

    இந்த நிலையில் இடைகாட்டூர் ஊராட்சி தலைவர் சண்முக நாதன் , கிராம மக்கள் ஆகியோர் போக்குவரத்துத் துறை அமைச்சர் கண்ணப்பனிடம் கோரிக்கை வைத்தனர்.

    அதன் அடிப்படையில் சிவகங்கையில் இருந்து  இடைகாட்டூருக்கு  புதிதாக பேருந்து சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று சிவகங்கையில் இருந்து இடைகாட்டூருக்கு முதல் முறையாக வந்த அரசு பேருந்தை ஊராட்சி மன்ற தலைவர் சண்முக நாதன் தலைமையில் கிராம மக்கள் வரவேற்றனர்.

    பெண்கள் ஆரத்தி எடுத்தும் பேருந்து ஓட்டுனர், நடத்துனருக்கு கிராம மக்கள் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பின்னர்  புதிதாக வந்த அரசு பேருந்தில் கிராம மக்கள் ஏறி சிறிது துராம் பயணம் செய்து மகிழ்ச்சியும். அடைந்தனர்.

    சிதம்பரநாதன், செய்தியாளர் - சிவகங்கை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: