Hijab Controversy : இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான தங்களது கண்டனத்தை தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஹிஜாப் உடை அணிவதற்கு தடை விதித்த கர்நாடக நீதிமன்றத்தின் உத்தரவை கண்டித்து கொட்டும் மழையில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அங்கு உள்ள பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் உடை அணிந்து வருவது குறித்த வழக்கில் அதற்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது..
இத்தீர்ப்பு குறித்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சிவகங்கையில் கொட்டும் மழையில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான தங்களது கண்டனத்தை தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
செய்தியாளர் : சிதம்பரநாதன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.