Home /News /tamil-nadu /

கீழடியைச் சேர்ந்த செவிலியருக்கு இங்கிலாந்து அரசின் விருது - சொந்த ஊரில் பாராட்டு விழா..

கீழடியைச் சேர்ந்த செவிலியருக்கு இங்கிலாந்து அரசின் விருது - சொந்த ஊரில் பாராட்டு விழா..

Keeladi

Keeladi

Keeladi: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை பெறும் முதல் தமிழனும் முதல் இந்தியனுமான  டேனியல் விஜயராஜ், அவ்விருதை தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    கீழடியில் பிறந்து அரசு தொடக்க பள்ளியில் படித்த தமிழரான செவிலியruக்கு  இங்கிலாந்தில் சேவை புரிந்தற்க்காக பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கி கவரவிப்பு . சென்னையில் முதல்வரிடம் விருதை காண்பித்து வாழ்த்து பெற்ற தமிழருக்கு கீழடி பள்ளியில் பாரட்டு விழா நடந்தது.

    கீழடியில் பிறந்து படித்த தமிழருக்கு செவிலியர் சேவை புரிந்தற்காக  இங்கிலாந்து நாட்டின் உயரிய விருதான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது கொடுத்து கவரவபடுத்தி உள்ளனர் இங்கிலாந்து நாட்டினர் .

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் பிறந்தவர் டேனியல் விஜயராஜ்.  இவர் கீழடி அரசு தொடக்கபள்ளியில் 1 வகுப்பு முதல் 5வகுப்பு வரை படித்து உள்ளார். 6வகுப்பு முதல் கிழடி அருகே உள்ள சிலைமான் பள்ளியிலும் அதன் பின் மதுரையிலும் படித்து கல்லுரி படிப்பபை அமெரிக்கன் கல்லூரியிலும் முடித்து விட்டு மதுரை பசுமலையில் நர்சிங் படித்து விட்டு  இங்கிலாந்தில் அரசு  செவிலியர் வேலைக்காக   மிடில்ஸ் ப்ரோ நகரில் உள்ள செளத் டீஸ் மருத்துவமனையில்  சேர்ந்து பணியாற்றி வந்து உள்ளார் .

    Also read:  திமுக-வுக்கு ஓட்டு கேட்டு சிக்கலில் சிக்கிய வெளிநாட்டு தொழிலதிபர்

    அங்கு பணியாற்றிய போது நோயாளி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது அந்த நோயாளிக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்ததால்   அந்த நோயாளி உயிர் பிழைத்து கொண்டார். அந்த நோயாளி பரிந்துரைப்படி இங்கிலாந்து நாட்டின் சிறந்த விருதான பிளாரன்ஸ் நைட்டிங்கேல்  விருது டேனியல் விஜயராஜ்-க்கு வழங்கபட்டது.

    இந்த விருதை பெறும் முதல் தமிழனும் முதல் இந்தியனுமான
    டேனியல் விஜயராஜ், அவ்விருதை தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    அவர் படித்த பள்ளியான சிவகங்கை மாவட்டம்  கீழடி தொடக்கப் பள்ளியில், அவருக்கு  ஊராட்சி தலைவர் வெங்கட சுப்பிரமணியம்,  பாரட்டு விழா நடத்தியிருக்கிறார்.  கீழடி வந்த அவர் மாணவர் மாணவிகளுடன் பள்ளி வகுப்பறைக்கு சென்று கலுந்துரையாடினர் அரசு பள்ளியில் படித்ததால் நான் இந்த உயரத்திற்கு சென்று உள்ளேன்  என்றும் நீங்களும் நன்றாக படித்து  உயரத்திற்கு  வர வேண்டும் என ஊக்கப்படுத்தினார்

    இது கூறித்து டேனியல் ராஜ் கூறும்போது கீழடி அகழாய்வு ஆராய்ச்சி குறித்து இங்கிலாந்து மக்கள் பேசுவார்கள்.  கீழடி இன்று உலக மக்களால் பேசபட்டு வருகின்றது என்றும் இந்த கீழடி பிறந்து படித்த எனக்கு பெருமையாக உள்ளது என்றார் .

    செய்தியாளர் சிதம்பரம் (சிவகங்கை)

     
    Published by:Arun
    First published:

    Tags: Keeladi, Sivagangai

    அடுத்த செய்தி