பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்.. பாராட்ட மறந்த மாவட்ட நிர்வாகம்
பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்.. பாராட்ட மறந்த மாவட்ட நிர்வாகம்
பறவைகள்
தீபாவளிக்கு பட்டாசு வெடிச்சத்தம் பறவைகளுக்கும் , குஞ்சுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் 1972-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பதில்லை.
50 ஆண்டுகாலமாக பறவைகளின் இனப்பெருக்கத்திற்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள் பெருமைப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம் திமுக ஆட்சியில் சிறுமைபடுத்தியதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திரும்பத்தூர் அருகே அமைந்துள்ளது கொள்ளுகுடிப்பட்டி கிராமம் இங்குள்ள கொள்ளுகுடிப்பட்டி கண்மாயில் சுமார் 38 ஏக்கரில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. மழை காலம் தொடங்கியவுடன் இங்கு ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சீதோஷணநிலைக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் பல ஆயிரக்கணக்கான வெளிநாடு மற்றும் வெளி மாநில பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருகை தந்து இனப்பெருக்கம் முடிந்ததும் மார்ச் , ஏப்ரல் மாதங்களில் மீண்டும் தங்களது இருப்பிடங்களுக்கு செல்லும்.
இந்த பறவைகளுக்காக கிராமத்தினர் பறவை முட்டைகளை சேதப்படுத்தும் குரங்குகளையும் கண்காணித்து விரட்டி வருகின்றனர் .மேலும் தீபாவளிக்கு பட்டாசு வெடிச்சத்தம் பறவைகளுக்கும் , குஞ்சுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் 1972-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகை மற்றும் சுபநிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகளில் கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை. இதனால் அக்கிராம மக்களை கவுரவிக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் வனத்துறை ஒவ்வொரு ஆண்டும் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவிக்கும்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்த வந்த நிலையில் தி.மு.க ஆட்சியில் பறவைகளை பாதுகாக்கும் எங்கள் கிராம மக்களை பாராட்டுவும் இல்லை இனிப்பு வழங்கி கவுரவப்படுத்தவும் இல்லை மாறாக சிறுமைபடுத்தி உள்ளனர் என வேதனை தெரிவித்தனர்
செய்தியாளர்: முத்துராமலிங்கம் (காரைக்குடி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.