சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் கார் விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆட்சியர்!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கார் விபத்து

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மாவட்ட ஆட்சியர் சென்ற வாகனம் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்சியர் லேசான காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். 

  • Share this:
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மாவட்ட ஆட்சியர் சென்ற வாகனம் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்சியர் லேசான காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி இன்று காலை காரைக்குடி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள காளையார்கோவில் வழியாக சென்றுள்ளார். அவருடன் உதவியாளர் மணி, தபேதார் ராஜசேகர், பாதுகாவலர் முகமது பாசிக் சென்றுள்ளனர்.

அப்போது, ஓட்டுனர் செபஸ்டின் வழக்கம்போல் வாகனத்தை ஓட்டி சென்ற நிலையில், காளக்கண்மாய் அருகே செல்லும்போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் குறுக்கே வந்த நிலையில் மோதாமலிருக்க வாகனத்தை திருப்பியுள்ளனர்.

இதில் நிலை தடுமாறிய ஆட்சியரின் கார், உருண்டு சென்று  அருகே இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் உள்ளே இருந்த ஆட்சியருக்கு லேசான காயமும் ஓட்டுனர், உதவியாளர் ஆகியோருக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டதுடன் மாற்று வாகனத்தில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. காயமடைந்த மாவட்ட ஆட்சியருக்கும்  அரசு மருத்துமனைையிலே சிகிச்சை அளிக்கப்பட்டது.
Published by:Esakki Raja
First published: