திமுகவினரிடையே கைகலப்பு.. பல லட்சம் மதிப்பிலான பணிகளுக்கான ஏலத்தில் ஒருவருக்கு மண்டை உடைப்பு!

திமுகவினரிடையே கோஷ்டி மோதல்

திமுக மாவட்ட துனை செயலாளர் சேங்கைமாறன் அனியினருக்கும், திமுகவை சேர்ந்த கோவானூர் சோமன் என்பவரது அணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 • Share this:
  பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளுக்காக நடைபெற்ற ஏலத்தில் திமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டதில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது.

  சிவகங்கை மாவட்டம், சிவகங்கை குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் ,பல லட்ச ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கான ஏலம் நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொள்ள வந்த திமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  சிவகங்கை நகராட்சி அலுவலகம் அருகேவுள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகளுக்கான டெண்டர் நடைபெற்றது.

  Also Read: திமுகவின் வெள்ளை அறிக்கையை ஒற்றை மீமில் கலாய்த்த அதிமுக!

  இதில்  திமுக சிவகங்கை மாவட்ட துணைச் செயலார் சேங்கை மாறன் தரப்பினர் உட்பட பல திமுக ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். அப்போது, திடீரென திமுக மாவட்ட துனை செயலாளர் சேங்கைமாறன் அனியினருக்கும், திமுகவை சேர்ந்த கோவானூர் சோமன் என்பவரது அணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  காயமடைந்த சோமன்


  இருதரப்புக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டு அருகில் இருந்த சேரை கொண்டு தாக்கிக் கொண்டதில் சோமன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சோமனின் ஆதரவாளர்கள் எதிர் தரப்புடைய காரை கல்லால் அடித்து தாக்கியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியதுடன் காயமடைந்த சோமனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
  Published by:Arun
  First published: