கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வணிக வளாகம்: முன்னாள் அமைச்சர் மீது புகார்!

கோப்புப் படம்

ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை இந்து அறநிலையத்துறை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், சிவகங்கையில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

 • Share this:
  அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மீது 11 ஏக்கர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டுவதாக சிவகங்கையில் திமுக நகர செயலாளர் புகார் அளித்துள்ளார். 

  சிவகங்கையில் கௌரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 15 கோடி மதிப்பிலான 11 ஏக்கர் கோவில் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மகன் பாலா உள்ளிட்ட உறவினர்கள் அபகரித்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக திமுக நகர செயலாளர் துரை ஆனந்த் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் அறநிலையதுறை அமைச்சரிடமும் புகார் மனு அளித்துள்ளார்.

  சிவகங்கை நகரில்   கௌரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான அறநிலையத்துறையில் 142 ஏக்கர் நிலம் உள்ளது. சிவகங்கை மேலூர் செல்லும் சாலையில் சுற்று சாலை சந்திப்பில் உள்ள இந்த இடம் (சர்வே எண் 335 மற்றும் 330) சுமார் 11 ஏக்கர் நிலத்தை முன்னாள் காதி மற்றும் கதர் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரனின் மகன் பாலா உள்ளிட்ட உறவினர்கள் உள்நாட்டு பத்திரம் மோசடியாக தயாரித்து இடத்தை அபகரித்து அமைச்சரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கம்பி வேலி அமைத்து திருமண மண்டபம் , வணிக வளாகம் , ஷோரூம் போன்றவை கட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த கட்டிடத்திற்கு விதிமுறைகளை மீறி மின் இணைப்பும் பெற்றுள்ளனர். கோவில் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.  திமுக ஆட்சிக்கு வந்து சில நாட்களிலேயே பல கோடி மதிப்பிலான அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில்,  அதேபோன்று சிவகங்கையிலும் விதிமுறைகளை மீறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள,  கோவிலுக்கு சொந்தமான  பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது .

  இதையும் படிங்க.. பிளஸ் 2 மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும்? சிபிஎஸ்இ விளக்கம்...
  Published by:Murugesh M
  First published: