மானா
மதுரையில் மணல் திருட்டில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 14 பேர் கைது, டிப்பர் லாரி,மினி வேன் பறிமுதல்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்பிரிவு மற்றும் நகர பகுதிகளில் மணல் திருட்டில் 9 பெண்கள் உள்பட 14 பேரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.
மானாமதுரை அருகே உள்ள கால்பிரிவு வைகை ஆற்று பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை மணல் திருட்டில் ஈடுபட்ட டிப்பர் லாரி ஒன்று மணலை அள்ளிக்கொண்டு வந்து கொண்டிருந்த போது ஆற்றின் ஓரத்தில் ஒரு இடத்தில் சிக்கி கொண்டதை அடுத்து அதை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மானாமதுரை போலீசார் அங்கு சென்று மணல் திருட்டில் ஈடுபட்ட பாலமுருகன் (வயது 26), மருதுபாண்டியன் (வயது 38), பிரேம்நாத் (வயது 21) ,மூர்த்தி (வயது 21) , கார்த்தி (வயது 21), ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
மேலும் லாரி உரிமையாளர் மணிமாறன் தப்பி ஓடிய லாரி டிரைவர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து மணலில் சிக்கி கொண்டிருந்த லாரியையும்,மற்றொரு மினிவேனையும் பறிமுதல் செய்து மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனிற்கு கொண்டு சென்றனர்.
இதே போன்று மானாமதுரை நகர பகுதி வைகை ஆற்றில் தலைச்சுமையாக சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திய ஆண்டாள் (வயது 55), சங்கீதா உள்பட 9 பெண்களையும் மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.