Home /News /tamil-nadu /

வைகை ஆற்றில் மணல் கொள்ளை... தட்டிக்கேட்ட வி.ஏ.ஓ மீது தாக்குதல் - 3 பேர் கைது

வைகை ஆற்றில் மணல் கொள்ளை... தட்டிக்கேட்ட வி.ஏ.ஓ மீது தாக்குதல் - 3 பேர் கைது

மணல் (கோப்பு படம்)

மணல் (கோப்பு படம்)

Sivagangai | காயமடைந்த வி.ஏ.ஒ இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளையான்குடி அருகே வைகை ஆற்றில் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் (வி.ஏ.ஒ) மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே, பெரும்பச்சேரி கிராமத்தில் தொடர்ந்து வைகை ஆற்றில் மணல் கொள்ளை நடைபெற்று வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மணல் கொள்ளை நடப்பதாக கிராம நிர்வாக அலுவலகர் மணிவண்ணனுக்கு (வி.ஏ.ஒ) புகார் வந்துள்ளது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணல் கொள்ளையில் ஈடுபட்ட டிராக்டரை பறிமுதல் செய்துள்ளார். அதன் பிறகு வி.ஏ.ஓ. மணிவண்ணன் சம்பவ இடத்திலிருந்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கவே காவல்துறை விரைந்து வந்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

எடுத்துச் செல்லும் வழியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களான டிராக்டர் உரிமையாளர் சுந்தரபாண்டியன், கனக சந்துரு மற்றும் ராமமூர்த்தி ஆகிய மூன்று பேரும் ‌சேர்ந்து ‌பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த. டிராக்டரை மீட்கும் முயற்சியில் வழி மறித்து தகராறு செய்துள்ளார்கள்.

இதையும் படியுங்கள் : தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்: விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?
 இதில் வி.ஏ.ஓ மணிவண்ணனை தாக்கியுள்ளனர், இதில் காயமடைந்த வி.ஏ.ஒ இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது தொடர்பாக இளையாங்குடி காவல்துறையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பேரையும் கைது செய்து வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Sivagangai

அடுத்த செய்தி