ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காலிப்பணியிடங்களை மறைப்பதா? திடீர் தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

காலிப்பணியிடங்களை மறைப்பதா? திடீர் தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் போராட்டம்

ஆசிரியர்கள் போராட்டம்

Sivagangai | சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு மேல்நிலை பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப மாவட்ட கல்வித்துறை மூலம் பொது இட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சிவகங்கையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது இட மாறுதல் கலந்தாய்வில் காலிப்பணியிடங்களை அதிகாரிகள் மறைப்பதாக கூறி ஆசிரியர்கள் திடிரென வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு மேல்நிலை பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப மாவட்ட கல்வித்துறை மூலம் பொது இட மாறுதல் கலந்தாய்வானது சிவகங்கை மருதுபாண்டியர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இதில்  பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில் 160 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 115 ஆசிரியர்கள் ஏற்கனவே பணியிடமாறுதல் பெற்று சென்ற நிலையில் மீதமுள்ள 45 காலிப்பணியிடங்களை அதிகாரிகள் மறைப்பதாக கூறி பணியிட மாறுதல் கோரி வந்த ஆசிரியர்கள் திடீரென கூட்டரங்கின் வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் காலிப்பணியிடங்களை முழுமையாக காட்டவும் அனைவருக்குமான பணியிட மாறுதலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை சமரசம் செய்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

First published:

Tags: Sivagangai, Teachers Protest