கூட்டுறவு வங்கியில் மோசடியா? போராடி நகைகளை பெற்ற விவசாயிகள்
கூட்டுறவு வங்கியில் மோசடியா? போராடி நகைகளை பெற்ற விவசாயிகள்
விவசாயிகள் போராட்டம்
Manamadurai | நகைகள் அடங்கிய பெட்டியின் சாவியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்ற கூட்டுறவு சங்க துணை மேலாளர் கோவிந்தராஜ் எதற்காக இப்படி செய்தார் என்பது தெரியவில்லை.
மானாமதுரை அருகே விவசாயிகளின் நகைகளை திருப்பி தராமல், நகை பெட்டகத்தின் சாவியை எடுத்துக் கொண்டு சென்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உதவி மேலாளரை பணியிடை நீக்கம் செய்ய கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்னகன்னனூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சின்னகன்னனூர் விவசாயிகள் தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். விவசாயிகள் நகை திருப்புவதற்கு நேற்று காலை சின்னகன்னனூர் கிராமத்தை சேர்ந்த 8 விவசாயிகள் 8 லட்சத்து 73ஆயிரம் பணம் கட்டி உள்ளார்கள்.
ஆனால் இந்த கூட்டுறவு சங்கத்தில் துணை மேலாளராக பணிபுரியும் கோவிந்தராஜ் மதியம் உணவு அருந்தி விட்டு கை கழவி விட்டு வருவதாக கூறிவிட்டு நகை பெட்டகத்தின் மற்றொரு சாவியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். இதனால் காலையில் இருந்து விவசாயிகள் காத்திருந்த நிலையில் மாலை 5.30 மணி ஆகியும் கோவிந்தராஜ் வரவில்லை. இதனால் கோபமடைந்த விவசாயிகள் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, ஊராட்சிமன்ற தலைவர் அங்குசாமி ஆகியோர் தலைமையில் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு உள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து புகார் தெரிவிக்கவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உயர் அதிகாரிகள், உதவி மேலாளர் கோவிந்தராஜனை தேடி அழைத்து வந்து விவசாயிகளிடம் நகையை ஒப்படைத்தனர்.
அவரை பார்த்து ஆத்திரமடைந்த விவசாயிகள் அவரை பணியிடைநீக்கம் செய்யக் கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் கடைசி வரை அவர் எதற்காக வெளியில் சென்றார் தெரியவில்லை.
செய்தியாளர் : சிதம்பரநாதன்.வி, சிவகங்கை மாவட்டம்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.