ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சீமானின் தந்தை செந்தமிழன் உயிரிழந்தார் - சிவகங்கையில் இறுதிச் சடங்கு

சீமானின் தந்தை செந்தமிழன் உயிரிழந்தார் - சிவகங்கையில் இறுதிச் சடங்கு

தந்தையுடன் சீமான்

தந்தையுடன் சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரின் சீமானின் தந்தை செந்தமிழன் உயிரிழந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக திரைப்பட இயக்குநர் சீமான் இருந்துவருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீமான் இந்தக் கட்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்திவருகிறார். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி போட்டியிட்டுள்ளது. 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 6 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது.

  சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் அவரின் அப்பா செந்தமிழன் வசித்துவந்தார். அவர், இன்று உயிரிழந்தார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ட்விட்டர் பதிவில், ‘முக்கிய அறிவிப்பு... நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை அப்பா செந்தமிழன் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Karthick S
  First published:

  Tags: Seeman