ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வைகோ, சீமான் குரல் கொடுக்க வேண்டும் - எச்.ராஜா வலியுறுத்தல்

எச்.ராஜா

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்க வைகே, சீமான் குரல் கொடுக்க  வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வைகே, சீமான் குரல் கொடுக்க வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ.க மூத்த தலைவரும் காரைக்குடி சட்டமன்ற பாஜக வேட்பாளருமான எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் அமைதியாக நல்ல முறையில் ஒட்டுபதிவு நடந்து முடிந்துள்ளது. ஆனால், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கமல்ஹாசன் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை.

  ஓட்டுப்பதிவு இயந்திரத்தை யாரும் ஹேக் செய்ய முடியாது, எந்த தில்லு முல்லும் நடக்க வாய்ப்பில்லை, அவ்வாறு ஹேக் செய்வதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தும் எந்த கட்சியும் ஏன் முன்வரவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

  மேலும், மின்னணு வாக்குபதிவு இயந்திரம் என்பது ஒரு கால்குலேட்டர் போன்றது. நெட் இணைப்பு கிடையாது. இவ்வாறு இருக்க செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை இறக்கும்போது வாக்குபதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியாதா? என ட்விட்டர் போட்டுள்ளனர் அது புரியாமல் செய்வதாகும். தேங்காய் நார் கண்டெய்னர், டாய்லெட் கண்டெய்னரை கண்டு மிரண்டுபோயுள்ளது இந்த பெரியாரிசம்.

  வாக்குபதிவு இயந்திரத்தில் தில்லு முல்லு செய்தால் 2019 தேர்தலில்  தி.மு.க., எப்படி 38 சீட்டில் ஜெயித்தது. நாங்கள் பத்து சீட்டாவது ஜெயித்திருக்கமாட்டோமா? தி.மு.க.,வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க., 3 இலக்கத்தை தொடாது.

  தோல்வி பயத்தால் பெண் காவலர்களின் ஹேண்ட் பேக்கை திறந்து பார்க்கின்றனர். தமிழக தேர்தலில் முதல்வர் ஆகும் வாய்ப்பு ஸ்டாலின் ஜாதகத்திலேயே இல்லை. தமிழக தேர்தலில் திமுக வரவே வராது அதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை தீய சக்தி திமுக வரக்கூடாது என மக்கள் வாக்களித்துள்ளனர் என்றார்.

  மேலும், ஸ்டெர்லைட் ஆலையை அலும்பு பிடித்து மூடினோம். அது ஆக்சிஜன் உற்பத்தி செய்தது. வைகோ, சீமான் போன்ற தீய சக்திகள் அந்த ஆக்சிஸன் ஆலையாவது திறந்து விடு என்று கேட்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

  தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. வேக்சின் பற்றாக்குறையும் இல்லை. பற்றாக்குறை இல்லாதபோது பக்கத்து மாநிலம் கேட்கும்போது நாம் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் வெளிமாநிலங்களுக்கு அனுப்பக்கூடாது, என்றார்.

  செய்தியாளர் - முத்துராமலிங்கம் துரைராஜ்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: