Sivagangai | விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வருமானம் ஈட்டித் தரும் தொழில் இதுதான்!

Youtube Video

சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சீமைக் கருவேல விறகு கரிக்கு வட மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த தொழில் மூலம் பயனடைகின்றனர். 

  • Share this:
    சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை கரிமூட்டம் போடும் தொழில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. வெட்டப்பட்ட சீமைக்கருவேல மரங்களை தரம் பிரித்து களிமண்ணால் மூடி தீ வைக்கின்றனர். ஒரு வாரம் கழித்து தண்ணீரை ஊற்றி மூட்டத்தை அணைத்து அதில் இருந்து கரியை பிரித்தெடுக்கின்றனர். பின்னர் அவற்றை வடமாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். வானம் பார்த்த பூமியான சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு இந்த சீமைக் கருவேல கரி மூட்டத் தொழில் முக்கிய வாழ்வாதாரமாக இருக்கிறது.

    விவசாயம் உள்ளிட்ட பிற தொழில்கள் கை கொடுக்காத நிலையில், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில், பல நூறு ஏழைக் குடும்பங்களுக்கு வருமானம் ஈட்டித் தரும் முக்கிய தொழிலாக இந்த கரி மூட்டத் தொழில் திகழ்கிறது.



    கருவேல மரங்களில் இருந்து கிடைக்கும் கரியில் அதிகளவு கார்பன் இருப்பதால் வடமாநிலங்களில் இதற்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக Ferro alloys என்ற கார்பன் தயாரிக்க இந்த வகை கரி சிறந்ததாக கருதப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... Corona Volunteers | தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு உதவும் தன்னார்வலர்கள்..

    இங்கு உற்பத்தி செய்யப்படும் கரி, சரக்கு ரயில்கள் மூலமாகவே வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால், இந்த கரி ஏற்றுமதி மூலம், மானாமதுரை ரயில் நிலையத்திற்கு மட்டும் ஒன்றரை கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்துள்ளது. சீமை கருவேல மரங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக எதிர்ப்பு இருந்தாலும் பல குடும்பங்கள் அதனை நம்பி வாழ்வதையும் மறுக்க இயலாது.
    Published by:Vaijayanthi S
    First published: