10 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட உள்ள சமத்துவபுரம்: வீடுகளின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய பயனாளிகள் கோரிக்கை!

சமத்துவபுரம்

முட்புதர்களாக காட்சி அளிக்கும் சமத்துவபுரத்தை  சுத்தப்படுத்தும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா கண்ணமங்கலப்பட்டியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட உள்ள சமத்துவபுரத்தில் வீடுகளின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

  2006- 2011 தி.மு.க., ஆட்சியின் போது சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி சமத்துவபுரத்தில் 100 வீடுகள் கட்டப்பட்டது. 2011ல் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது. தி.மு.க., அரசின் திட்டம் என்பதால் அ.தி.மு.க. அரசு கிடப்பில்போட்டது.  பயன்பாடு இல்லாததால்  கட்டடங்கள் சேதமடையத் தொடங்கியது.  90 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் 2011 ல் ஆட்சி மாற்றத்தால்  இறுதிக்கட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டது. 2016 ல் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில் வீடுகளை விழா ஏதுமின்றி பயனாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் ஜெ., மறைவுக்கு பிறகு அந்த முயற்சியும் கிடப்பில் போடப்பட்டது.

  தற்போது 2021 ல் தி.மு.க.,  ஆட்சி  மீண்டும் அமைத்துள்ள நிலையில் சமத்துவபுரத்தை திறப்பது உறுதியாகியுள்ள நிலையில் முட்புதர்களாக காட்சி அளிக்கும் சமத்துவபுரத்தை  சுத்தப்படுத்தும் பணி  மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமத்துவபுர வீடுகள் சேதமடைந்து காணப்படுகிறது. ஆனால் அங்குள்ள வீடுகள் உறுதியாக உள்ளதா ? மக்கள் வசிக்க தகுதியானதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே கட்டடங்களின் உறுதித்தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்து, முழு பராமரிப்புக்கு பிறகே பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என  வலியுறுத்தி உள்ளனர் .

  காரைக்குடி செய்தியாளர் முத்துராமலிங்கம்
  Published by:Arun
  First published: