• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • செஸ் போட்டியில் சாதிக்கும் காரைக்குடி பள்ளி மாணவன் பிரனேஷ்

செஸ் போட்டியில் சாதிக்கும் காரைக்குடி பள்ளி மாணவன் பிரனேஷ்

பள்ளி மாணவன் பிரனேஷ்

பள்ளி மாணவன் பிரனேஷ்

10 வயதுக்குள் பரிமாணங்களை கடந்த செஸ் போட்டியில் பல்வேறு சாதனையை படைத்தான் சிறுவன் பிரனேஷ்.

  • Share this:
உலகப்போட்டி தகுதியால் செஸ் விளையாட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் காரைக்குடி பள்ளி மாணவன் பிரனேஷ்.

ஒவ்வொருவரின் சாதனைகளுக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அந்த வகையில் வாடகை வீட்டில் மாடியில் வசித்து வரும் மாணவன் விளையாடுவது கீழ் உள்ள வீட்டின் உரிமையாளருக்கு தொந்தரவாக இருக்கிறது என அவர் கூறியதால், இன்டோர் கேமான செஸ்சில் இன்டர்நேஷனல் சாதனை படைத்து வருகிறான்.

சிவகங்கை மாவட்டம்  காரைக்குடியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவர் பிரனேஷ். இவர் காரைக்குடி வித்யாகிரி பள்ளியில் படித்து வருகிறார். தந்தை  முனிரத்தினம் ஜவுளிக்கடை ஒன்றில்  கணக்கராகவும், அம்மா மஞ்சுளா அங்கன்வாடி பணியாளராகவும் பணியாற்றி வருகின்றனர் தற்போது வாடகை வீட்டில் மாடியில் வசித்து வரும் இவர்களின்   குழந்தைகள் சிறு வயதில் வீட்டில் அங்குமிங்கும் ஆடிப்பாடி விளையாடியபோது, வீட்டின் உரிமையாளர், ‘‘கீழே இருக்க முடியவில்லை, சத்தம் போடாமல், ஓடாமல் விளையாடுங்கள்’’ என கூறி சத்தம் போட்டுள்ளார்.

Also Read: Tokyo Olympics | கொரோனா பீதி: ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யுங்கள்- ஜப்பானியர்கள் வலியுறுத்தல்

இதனால் ஓடி ஆடி விளையாடுவதை நிறுத்திய பிரனேஷ் தாய் மஞ்சுளாவிடம் அமர்ந்து விளையாடும் விளையாட்டை சொல்லித்தரும்படி கேட்டார். அவர் அம்மாவும் செஸ், கேரம் போர்டு போன்றவற்றை வாங்கி கொடுத்தனர். ஆரம்ப கால குருவாக அம்மா செஸ்சை கற்று கொடுக்க அபார ஞானம் ஐந்து வயதிலேயே கற்றுக்கொடுத்த அம்மாவை வென்று சாதனை படைத்தது வீட்டுக்குள் உள்ள சாதனை வெளி உலகுக்கு தெரிய வேண்டும் என எண்ணிய அவரது தந்தை காரைக்குடியில் உள்ள  செஸ் அகாடமியில் சேர்த்து விட்டார்.

அப்பயிற்சி மைய பயிற்சியாளர் பிரனேஷை மாவட்ட, மாநில போட்டிகளில் வெற்றி பெறும் அளவுக்கு உருவாக்கினார்.10 வயதுக்குள் பரிமாணங்களை கடந்த பல்வேறு சாதனையை படைத்தான் சிறுவன் பிரனேஷ். இதைப்பார்த்தை சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ரமேஷ் ஆன்லைன் வழியாகவும், நேரடியாகவும் இலவச பயிற்சி அளித்தார்.மாநில அளவில் நின்ற மாணவனின் சாதனை, தேசிய, உலக அளவில் உயர்ந்தது. 2020&ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஏரோபிளாட் கிராண்ட் மாஸ்டர் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அங்கு ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டர் சவ்ஜிங்கோ போரிஸ், சூப்பர் கிராண்ட் மாஸ்டர் கார்த்திகேயன் முரளி, ஜெர்மனியின் சூப்பர் கிராண்ட் மாஸ்டர் சிவானோராஸ்மஸ் என உலகின் முதல் தரமான 9 செஸ் வீரர்களுடன் போட்டியிட்டு வென்று காட்டி சர்வதேச மாஸ்டரில் 3&வது நாமை வென்று காட்டினான். பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2017&18, 2018&19&ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான போட்டியில் 2 முறை தங்கம் வென்று முன்னாள்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம்  ரூ.2 லட்சம் பரிசை வென்றார்.

இதுவரை 58 க்கும் மேற்பட்ட தங்கம், வெள்ளி பதக்கங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.எதிர்காலத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை சேர்ப்பதோடு, இந்தியா தலை நிமிரவும் பாடுபடுவேன் என்கிறார் பிரனேஷ்.

காரைக்குடி செய்தியாளர் : முத்துராமலிங்கம்


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: