Home /News /tamil-nadu /

சிவகங்கையில் சேவல் சண்டைக்கு தயாராகும் சேவல்கள்..!

சிவகங்கையில் சேவல் சண்டைக்கு தயாராகும் சேவல்கள்..!

சேவல் சண்டை

சேவல் சண்டை

சிவகங்கை பகுதிகளில் வெற்றுகால் சேவல் சண்டை தான் பிரபலம்.

    சிவகங்கை பகுதிகளில்  சேவல்களுக்கு போர்க்கள பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    சேவல் சண்டை என்ற விளையாட்டை அழிவின் விளிம்பில் இருந்து மீட்டெடுக்க சேவல்களை தயார் செய்து வருகிறார்கள் சிவகங்கை சேர்ந்த இளைஞர்கள் உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்ததை போல் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்தவது குறித்து தமிழக அரசின் நிலைபாட்டை நீதிமன்றம்  கேட்ட நிலையில்  ஒரு பக்கம் பயிற்சி நடந்து வருகிறது .தேனி மாவட்டத்தில் 17ம் தேதி  போட்டிகள் நடைபெறுவதையொட்டி சிவகங்கைச் பகுதிகளில் நடைபெறும் சேவல் பயிற்சி களைக்கட்ட தொடங்கி உள்ளது.

    Also Read: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேதி மாற்றம்

    சேவல் சண்டைகள் பல வகை

    சேவல் சண்டையானது, சேவல்கட்டு, கோட்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை, என ஒவ்வொறு மாவட்டத்திற்கும் ஏற்ப வெவ்வேறு விதிகளோடு பல்வேறு பெயர்களில் நடத்தப்படுகின்றன ஆனால்
    சிவகங்கை பகுதிகளில் வெற்றுகால் சேவல் சண்டை தான் பிரபலம்.

    சேவல்


    தற்போது சிவகங்கை பகுதிகளில் பயிற்சி  அளிக்கும் பணியில், அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜனவரி 17-ம் தேதி தேனியில் சேவல் சண்டை போட்டிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து வருகின்றது. தொடர்ந்து  பல்வேறு மாவட்டத்தில் இருந்து வரும் சேவல்கள் மோதுகின்றன. இதற்காக சிவகங்கை பகுதிகளில்  சேவல்களுக்கு போர்க்கள பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

    Also Read: சேவல் சண்டை போட்டி அரசின் நிலைப்பாடு என்ன? - நீதிமன்றம் கேள்வி

    சேவல்களுக்கு சத்தான உணவு

    சண்டை சேவல்களுக்கு தரும் உணவு வகைகளே மிகவும் பிரமாண்டமாக இருக்கும். 21 நாளில் ஒரு சேவல் ஒன்றரை கிலோ பாதாம் பருப்பு சாப்பிட்டு விடும். தினமும் 25 பாதாம் பருப்பை மிக்சியில் அரைத்து உருண்டை போல் எடுத்து சேவல்களுக்கு கொடுப்பார்கள். தினமும் 3 முட்டை, கேப்பை, கம்பு, உளுந்து, பாசிப்பயறு, கானம்,  வெந்தயம், மிளகு இவற்றை மாவு போல் அரைத்து, கலப்பு உணவு தினமும் வழங்கப்படும்.

    சேவல் சண்டை


    உடற்பயிற்சி

    இதை தவிர ஒரு நாள் விட்டு, ஒரு நாள் 25 நிமிடம் நீச்சல் பயிற்சி அளிக்கப்படும். மேலும் மண் வாரும் பயிற்சியும் கற்ற தரப்படுகின்றது. உடற்பயிற்சிகள் தினமும் நடக்கும். பயிற்சி முடிந்ததும் தினமும்  வழங்கப்படும். அதேபோல் முட்டையுடன் கேப்பை  மாவுடன் கலந்து சேவலுக்கு ஊட்டுவார்கள். இப்படி தீவிர பயிற்சி எடுக்கும் சேவலை,போட்டிக்கு இரண்டு நாள் முன்பு வேப்பஇலை, நொச்சிஇலை, தும்பை இலை, வாவரக்காச்சி இலை, புளியஇலை, யூக்கலிப்டஸ், துளசி போன்ற மூலிகை இலைகளை கொதிக்க வைத்த நீரில் மஞ்சள் கலந்து குளிக்க வைப்பார்கள்.

    சேவல் சண்டை


    அதன் பின் ஷாம்பு போட்டு சேவலை குளிக்க வைத்து உலர வைப்பார்கள். இதன் பிறகு களம் இறங்கும் சேவல் எதிர்த்து நிற்கும் சேவலை துவம்சம் செய்து விடும்.  இது கூறித்து சேவல் உரிமையாளர்கள் கூறும் போது, நாங்கள் வெற்றுக்கால் சேவல் சண்டைக்கு மட்டும் அனுப்புவோம். தமிழர்களின் கலாச்சாரத்தின் சின்னம் சேவல் சண்டை இதனை முழுமையாக நடத்த வேண்டும் என்கின்றனர். சேவல் சண்டையின் பெருமை பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாங்கள் சேவல் சண்டையை பொருளாதார ரீதியாக நடத்தவில்லை. தமிழர்களின் பாரம்பரிய கலாசாரமாக கருதி சேவல் சண்டை நடத்த வேண்டும் என்பதே இந்த பகுதி இளைஞர்களின் விருப்பமாக உள்ளது.

     செய்தியாளர்:  வி.சிதம்பரம் ( சிவகங்கை )
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Fight, Pongal, Pongal festival, Sivagangai, Tamilnadu

    அடுத்த செய்தி