மோடி அரசு இருக்கும் வரை பெட்ரோல் விலை குறையாது: கார்த்தி சிதம்பரம் எம்.பி

மோடி அரசு இருக்கும் வரை பெட்ரோல் விலை குறையாது; கார்த்தி சிதம்பரம் எம்.பி

தமிழ்நாட்டில் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பாஜக அந்தக் கட்சியின் சித்தாந்தத்தை மக்கள் ஏற்றுக் கொள்வது இல்லை என்று கூறியுள்ளார்.

 • Share this:
  மோடி அரசு இருக்கும் வரை பெட்ரோல் விலை குறையாது என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் எச்.ராஜா மீது புகார் கூறிய பாஜக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தொகுதி எம்.எல்.ஏ மாங்குடி, திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ கரியமாணிக்கம் அம்பலம் ஆகியோர் முன்னிலையில் தங்களை காங்கிரஸ் கட்சியில் சேர்த்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பிறகு செய்தியாளர் சந்தித்த கார்த்திக் சிதம்பரம் எம்பி கூறும்போது, ஒன்றிய அரசு என்று அழைப்பது சரியான வார்த்தை தான். அதிமுக சொல்வது தவறு யூனியன் என்றால் ஒன்றியம் என்றுதான் அர்த்தம்.

  பொருளாதாரம் பல மடங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு மாற்று அரசியல் தேவை ஏற்பட்டுள்ள நிலையில் தலைமை தாங்க தகுதி படைத்த இயக்கம் காங்கிரஸ் மட்டுமே என்று கூறினார்.

  பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்வது கிடையாது. தவறான பொருளாதாரக் முடிவுகளால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஜிஎஸ்டி என்றால் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விதமான ஜிஎஸ்டி. இதனால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

  Also read: நீட் தேர்வு, ஒளிப்பதிவு திருத்தச்சட்டம் குறித்து விவாதத்துக்கு தயாரா? சூர்யாவுக்கு பாஜக அழைப்பு

  பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் அரசுக்கு வரி வருமானம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீது வரிவிதிக்கப்பட்டுள்ளது. அதனால் 130 கோடி மக்களும் வரி கட்ட வேண்டும். மேலும் செஸ் வரி மாநிலத்துடன் பகிர வேண்டாம் வரிச் சுமையை மக்கள் மீது திணிப்பதற்காகவே தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்வு ஏற்பட்டு வருகிறது.

  மோடி அரசு இருக்கும் வரை பெட்ரோல் விலை குறையாது தமிழ்நாட்டில் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பாஜக அந்தக் கட்சியின் சித்தாந்தத்தை மக்கள் ஏற்றுக் கொள்வது இல்லை. பத்து வருடகாலமாக செயலற்று இருந்த தமிழகத்தை சீர்திருத்தம் செய்ய 60 நாட்கள் பத்தாது. தமிழகத்தில் உள்ள குளறுபடிகளை திமுக அரசு நிச்சயம் சரிசெய்யும் என்றும் தெரிவித்தார்.

  செய்தியாளர் - முத்துராமலிங்கம்
  Published by:Esakki Raja
  First published: