ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அயன் பட பாணியில் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த நபர்.. பாதுகாப்பு வழங்கிய போலீசார்!

அயன் பட பாணியில் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த நபர்.. பாதுகாப்பு வழங்கிய போலீசார்!

அயன் பட பாணியில் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த நபர்.. பாதுகாப்பு வழங்கிய போலீசார்!

அயன் பட பாணியில் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த நபர்.. பாதுகாப்பு வழங்கிய போலீசார்!

விமானநிலைய அதிகாரிகளுக்கு தெரியாமல் (குருவியாக) அயன் பட பாணியில் வயிறு அல்லது ஆசன வாய் வழியாக தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டுச் சென்றால் ரூ.1.20 லட்சம் கமிஷன் கிடைக்கும் என்று திருப்பதியிடம் கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  அயன் பட பாணியில் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்ததாக கூறியவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கற்பகவிநாயகர் வீதியைச் சேர்ந்தவர் திருப்பதி. பி.இ. சிவில் படித்த அவர், துபாயில் பணிபுரிந்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊருக்கு திரும்பியவர், மீண்டும் துபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு வேலையில்லாததால் கடந்த மார்ச் மாதம்  ஊருக்கு திரும்ப முடிவு செய்துள்ளார். ஆனால் பணம் இல்லாததால், ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுகுறித்து அவரது முதலாளி தவச்செல்வத்திடம் கூறியுள்ளார். தவச்செல்வம் விமானநிலைய அதிகாரிகளுக்கு தெரியாமல் (குருவியாக) அயன் பட பாணியில் வயிறு அல்லது ஆசன வாய் வழியாக தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டுச் சென்றால் ரூ.1.20 லட்சம் கமிஷன் கிடைக்கும் என்று திருப்பதியிடம் கூறியுள்ளார்.

  மேலும் அதுதொடர்பான தரகர் சதாம் என்பவரையும்  அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் மற்றொரு நபரிடம் இருந்து மூன்று தங்க உருண்டைகளை வாங்கி கொடுத்துள்ளார். அதனை திருப்பதி தனது ஆசனவாயில் வைத்து ஏப்.2-ம் தேதி இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளார். அதில் ஒரு தங்க உருண்டையை அவரது உறவினர்  நாகநாதனிடமும், மற்றொரு உருண்டையை தவச்செல்வம் கூறிய நபரிடமும் கொடுத்துள்ளார். மீதி இருந்த ஒன்றை திருப்பதி வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

  Also read: கம்யூனிஸ்ட் கட்சியினரின் துண்டுதல் பேரில் பொய் புகார்; சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் மனைவி புகார்

  இந்நிலையில் ஜூலை 3-ம் தேதி திருப்பதி வீட்டிற்கு வந்த மூன்று பேர் அவரது தந்தை சவுந்தரபாண்டியனிடம் துபாயில் இருந்து கொடுத்துவிட்ட மூன்று தங்க உருண்டைகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு மிரட்டி சென்றுள்ளனர். இதையடுத்து திருப்பதி தனக்கு ஆபத்து இருப்பதாக கூறி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

  இதையடுத்து வெளிநாட்டில் இருந்து தங்க உருண்டைகளை கடத்தி வந்த திருப்பதி மற்றும் அவரது வீட்டிற்கு கடந்த 15 நாட்களாக ஒரு எஸ்.ஐ. மற்றும்  தலைமை காவலர் என இரு காவல்துறையினர் 24gol மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  காவல்நிலையத்தில் மனு கொடுத்தால் விசாரிக்க ஆளில்லை என கூறும் காவல்துறையினர் தங்கம் கடத்தியவருக்கு பாதுகாப்பு அளித்து வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் - முத்துராமலிங்கம்

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Gold, Karaikudi, Sivagangai