மாணவர் சேர்க்கையில் அசத்தும் அரசு பள்ளி; கொரோனா ஏற்படுத்திய மாற்றத்தால் அரசு பள்ளியை விரும்பும் பெற்றோர்கள்!!

சிவகங்கை அரசு பள்ளி

தனியார் பள்ளிகளைப் போன்று மாணவர்களுக்கு சீருடை,  டை, ஷு , அணியும் முறை இங்கு கொண்டு வரப்பட்டது. இது பள்ளியில் பயிலும்  மாணவர்களின் பெற்றோர் மத்தியில் வரவேற்பு பெற்றது.

 • Share this:
  மக்கள் மத்தியில் உள்ள தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வந்தது. அதனை தடுக்க முடியாமல் அரசுப் பள்ளி நிர்வாகமும், கல்வித்துறையும் திணறி வருகின்றன.

  எனினும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
  நடுநிலைப் பள்ளியாக இருந்த இப்பள்ளி 2013 - 14ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது 6  ஆசிரியர்களும், 218 மாணவர்களும் இருந்தனர்.

  அதே ஆண்டு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பீட்டர் ராஜா முயற்சியால் தனியார் பள்ளிகளைப் போன்று மாணவர்களுக்கு சீருடை,  டை, ஷு , அணியும் முறை இங்கு கொண்டு வரப்பட்டது. இது பள்ளியில் பயிலும்  மாணவர்களின் பெற்றோர் மத்தியில் வரவேற்பு பெற்றது.

  2014 - 2015ம் ஆண்டு கல்வி ஆண்டில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது. உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதிலிருந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள்  100% தேர்ச்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனால் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தற்பொழுது 6 முதல் 10ம்  வகுப்புகள் வரை கொண்ட இந்த பள்ளியில் 45 ஆசிரியர்கள் உள்ளனர். இங்கு சென்ற கல்வி ஆண்டு வரை 1490 மாணவர்கள் படித்தனர். கொரோனா ஊரடங்கால் தற்போது பள்ளியில் பயிலும்  மாணவர்களுக்கு அரசு உத்தரவுப்படி மாணவர்கள் பயிலும் பாடங்கள் மற்றும் முக்கிய தகவல்கள் மாணவர்களின் வாட்ஸ்அப்  எண்ணுக்கு தினந்தோறும் அனுப்பபடுவதால் பெற்றோர், மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

  மேலும், பள்ளி வளாகத்தில் நுழையும் போது தானியங்கி கிருமி நாசினி, தூய குடிநீர் வசதி, தனி கவனமுடன்  மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர்கள், சி.சி.டி.வி கேமராக்கள் என  தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிலான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, மாநில அளவில் சிறந்த அரசு பள்ளியாக செயல்படுகிறது.

  Also read: மாணவிகளை கட்டிப்பிடித்தது ஏன்? - போலீசில் சிவசங்கர் பாபா அளித்த வாக்குமூலம்

  இந்நிலையில், இந்த ஆண்டு 6ம் வகுப்பு சேர்க்கையில் இந்த பள்ளி அசத்தி உள்ளது என்றே கூறலாம். கடந்த ஆண்டு 6ம் வகுப்பில் 335 மாணவர்கள் சேர்ந்த நிலையில், இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இதுவரை மட்டும் 400 மாணவர்கள் 6ம் வகுப்பில் சேர விருப்பம் தெரிவித்து விண்ணப்ப மனு வாங்கிச் சென்று உள்ளனர்.

  கொரோனா ஊரடங்கால் நடுத்தர மக்கள் வருவாய் இழந்து தவித்து வருவதால் தனியார் பள்ளியில்  கட்டணம் செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதுபோன்ற சூழலில், மாவட்டத்தில் இந்த அரசு பள்ளி சிறந்த பள்ளியாக செயல்படும் காரணத்தினால், தனியார் பள்ளியில் படித்து வந்த 250 மாணவர்கள் அரசு பள்ளியில் படிக்க விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

  செய்தியாளர் - முத்துராமலிங்கம்
  Published by:Esakki Raja
  First published: