கடையினுள் புகுந்து முட்டை , போர்வை , உண்டியலை திருடிய முதியவர்... சிசிடிவியில் பதிவான காட்சி
கடையினுள் புகுந்து முட்டை , போர்வை , உண்டியலை திருடிய முதியவர்... சிசிடிவியில் பதிவான காட்சி
சிசிடிவியில் பதிவான காட்சி
Sivaganga District | முதியவர் ஒருவர் அதிகாலை கடையினுள் புகுந்து முட்டை , போர்வை , உண்டியலை திருடும் காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உணவகத்தை நடத்தி வருபவர் பாலமுருகன். இவர் வழக்கமாக காலை 4 மணிக்கு உணவகத்தில் சமையல்பணியாளர்கள் வருவதற்காக, சமையல் செய்வதற்காக பூட்டை திறந்து பின் பூட்டாமல் ஷட்டரை மட்டும் சாத்தி விட்டு வாக்கிங் சென்றுவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனிடையே இதனை கண்காணித்து வந்த முதியவர் ஒருவர் அதிகாலை கடையின் உள்ளே நுழைந்து விபூதியை பூசிக்கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபடத் தொடங்குகின்றார். ஏதாவது தனக்கு திருடுவதற்கு கிடைக்குமா என மேஜையில் தேடிய முதியவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. தொடந்து சமையலுக்கு இருந்த முட்டை எடுத்துக் கொள்கிறார். மேலும் தொண்டு நிறுவனங்கள் சார்பாக மேஜையில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை திருடி சென்று விடுகிறார்.
இதன் பின்னர் அதிகாலை சமையல் பணிக்கு வந்த ஊழியர்கள் ஷட்டர் திறந்து கிடப்பதை பார்த்துஅதிர்ச்சியடைந்து நடைப்பயிற்சிக்கு சென்றிருந்த ஹோட்டல் உரிமையாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடை ஷட்டர் திறந்து உள்ளது பற்றி தகவல் தெரிவித்தனர்.
தனது கடைக்கு வந்த பாலமுருகன் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்கின்றார். அதில் முதியவர் ஒருவர் வந்து செல்வது தெரிய வந்துள்ளது. மேலும் முதியவர் தொண்டு நிறுவன உண்டியல் மற்றும் முட்டைகள், போர்வை ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காரைக்குடி வடக்கு காவல்துறையினர் முதியவரை தேடிவருகின்றனர்.
செய்தியாளர் : முத்துராமலிங்கம்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.