• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் ரஸ்க்.. பேக்டரிக்கு சீல் வைத்த அதிகாரிகள்

சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் ரஸ்க்.. பேக்டரிக்கு சீல் வைத்த அதிகாரிகள்

Youtube Video

குழந்தைகள், வயதானோர்கள் மற்றும் நோயாளிகள் அதிகம் உண்ணக்கூடிய ரஸ்கை, உற்பத்தி செய்யும்போது வடமாநிலங்களில் இருந்து வெளியான வீடியோக்கள் அதிர்ச்சியளிப்பவையாக இருந்தது.

  • Share this:
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தரமற்ற முறையில் சுகதாரமின்றி தரையில் கொட்டி, ரஸ்குகளை தயாரித்த பேக்டரிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டுப்போட்டனர். வட இந்திய ஊழியர்களின் அநாகரிக செயல்களால், சிக்கிய உணவகங்கள்..

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள உணவகத்தில் பிரியானி உண்டு, சிறுமி உயிரிழந்த சம்பத்தின் அதிர்ச்சி பொதுமக்களிடையே இன்னும் நீக்கவில்லை. இந்நிலையில், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் அதிகம் உண்ணக்கூடிய, ரஸ்கை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் சிலர் அவற்றின் மீது எச்சில் துப்பியும், காலுக்கு அடியில் போட்டு மிதித்தும் பாக்கெட்டில் அடைப்பது போன்ற வடமாநில வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இது பொதுமக்கள் மற்றும் பெற்றோர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள 10 ரஸ்க் பேக்டரிகளிலும் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிவதால், சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிரபல ஓட்டல் ஒன்றில் இருந்து, கெட்டுப்போன இறைச்சி, குளிர்சாதன பெட்டியில் உறைய வைக்கப்பட்டு இருந்த பழைய பரோட்டா மாவு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சில இறைச்சி கடைகளில் இருந்து, தரமற்ற இறைச்சியும் கைப்பற்றப்பட்டது. இதைதொடர்ந்து, விதிகளை பின்பற்றி செயல்படுமாறு, கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    Also Read:  ரெவ் பார்ட்டி.. நடன அழகிகள் நிர்வாண நடனம்.. போதை சப்ளை - தனியார் ரிசார்டில் ஆட்டம் போட்ட கும்பல்

    அங்குள்ள ரஸ்க் என்ற பேக்டரிக்குள் சென்ற அதிகாரிகள், ரஸ்குகளை ஊழியர்கள் தரையில் கொட்டி அப்படியே பாக்கெட்டில் அடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சுகாதாரமற்ற முறையில் தயாரித்து அங்கு வைக்கப்பட்டு இருந்த, 200 கிலோவிற்கும் அதிகமான ரஸ்குகளை குப்பையில் கொட்டினர். கொரோனா முன்னெச்சரிக்கைகளை பின்பற்றாமலும், சில ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலும் இருந்ததால், அந்த பேக்டரிக்கு அதிகாரிகள் உடனடியாக பூட்டு போட்டனர். விசாரணைக்கு வருமாறு உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



    இனி ரஸ்குகள் தயாரிக்கும் இடங்கள் சுகாதாரமாக பராமரிக்கப்படும் என, அந்த பேக்டரியின் ஊழியர்கள் உறுதியளித்தனர். ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடுவதை போன்றது என்ற திரைவசனம் தலைகீழாக மாறி, குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கான ரஸ்கை சாப்பிடுவதே பெரிய ரிஸ்க் ஆக மாறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     செய்தியாளர்: முத்துராமலிங்கம் துரைராஜ் (  காரைக்குடி)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: